அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு 44,228 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, July 16, 2024

அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு 44,228 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

 அஞ்சல் துறையில் 10 ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு 44,228 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு


இந்திய தபால் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தபால் அலுவலகங்களில் தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 44,228 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 3,789 பணியிடங்கள் 

நிரப்பப்படும்.


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். தபால் அலுவலர் பணிக்கு ரூ.12,000 – 29,380 வரையும், உதவி தபால் அலுவலர் பணிக்கு ரூ.10,000 – 24,470 வரையும் சம்பளம் வழங்கப்படும்.


இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


இந்த பணியிடங்களுக்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2024 ஆகும்.


பணியிடங்கள் தொடர்பாக மேலும் தகவல்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினை காணவும்.


விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் வழக்கமான தளர்வுகள் உள்ளது. இந்த பதவிக்கான விண்ணப்பச் செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்.


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment