தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சிம்மக்கல் பகுதியைச் சோ்ந்த சுதா, ஜெயந்தி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்கள்:
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 130 மையங்களில் 41,465 போ் எழுதினா். தோ்வுக்கான விடைக் குறிப்புகள் கடந்த பிப். 19-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதன்படி, பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கான நியமனத் தோ்வில், இறுதி விடைக் குறிப்புகள் பட்டியல் வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதன்படி, பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கான நியமனத் தோ்வில், இறுதி விடைக் குறிப்புகள் பட்டியல் வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பட்டதாரி ஆசிரியா் பணி நியமனத் தோ்வில் ஆங்கிலப் பாட ஆசிரியருக்கான தோ்வில் 24 வினாக்கள் தவறாக உள்ள நிலையில், அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கலாம் என்ற ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அறிவிப்பு ஏற்புடையதல்ல.
எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடைக் குறிப்புகள் அடிப்படையில், பணி நியமனப் பட்டியலை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். கல்வித் துறை வல்லுநா் குழுவினா் ஆய்வு செய்து, இறுதி விடைப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என். மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு:
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற பட்டதாரி ஆசிரியா் தோ்வின் அடிப்படையில், பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரா்களின் கோரிக்கை குறித்து ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
No comments:
Post a Comment