ஏ.சி.யால் `கரண்ட் பில்' அதிகம் வராமல் இருக்க டிப்ஸ்..!
வெயில் நாட்களில், வீடுகள், தஅலுவலகங்கள் தோறும் 'ஏ.சி.' எனப்படும் குளிர் சாதனங்கள் 'ஓவர்டைம்' ஆக இயங்கிவருகின்றன. இதனால் 'கரண்ட் பில்'லும் எகிறுகிறது. வீட்டில் விடிய விடிய ஏ.சி. ஓடினாலும் கரண்ட் பில் கையைச்'சுட'க் கூடாது என்று நினைக்கிறீர்களா? அதற்கு சின்னச் சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும்.
சிலர் நல்ல குளிர்ச்சி வேண்டும் என்று நினைத்து. ஏ.சி.யை மிகவும் குறைவான வெப்பநிலையில் வைப்பார்கள். ஆனால் அவ்வாறு ஏ.சி. இயங்கும்போது அதிக மின்சாரத்தைச் செலவழிக்கும். எனவே ஏ.சி.யைமிகவும் குறைவான வெப்பநிலையில் வைக்காமல் 20 டிகிரிக்கு மேல் வைப்பதே நல்லது. மனித உடலுக்குத் தேவையான வெப்பநிலை 24 டிகிரி என்பதால் அந்த அளவி லேயே ஏ.சி. வெப்பநிலையை வைக்கலாம். இதனால் கரண்ட் பில்லை மிச்சப்படுத்தலாம்.
ஏ.சி.யை சர்வீஸ் செய்து பயன்படுத்தும்போது அது நன்றாக வேலை செய்யும். இதன் மூலமும் கரண்ட் பில்லை குறைக்க முடியும். ஏ.சி.யின் பில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். பில்டரில் தூசு இருந்தால் அது ஏ.சி.யின் குளிரூட்டும் திறனை குறைக்கும்.
அதேபோல் ஏ.சி.யை பயன்படுத்தும்போது கதவு. ஜன்னல் ஆகியவை நன்றாக மூடி இருக்கிறதா என்பது உறுதிசெய்துகொள்ளுங்கள். ஏனெனில் அனல் காற்று உள்ளே வந்தால் ஏ.சி.யால் உட்புறத்தை குளிர்விக்க நேரம் ஆக லாம். கதவு, ஜன்னல்களை கவனமாக மூடிவைப்பதன் மூலமும் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.
சிலருக்கு, ஏ.சி.யை இயக்கும்போது சீலிங்பேனையும் போடலாமா என்ற சந்தேகம் இருக் கும். ஆனால் ஏ.சி.யை பயன்படுத்தும்போது கூரை மின் விசிறியையும் சுழலவிடுவது நல்லதுதான். இதனால் குளிர்காற்று, அறையின் மூலை முடுக்கிலும் வேகமாக சென்றடையும். இதன் மூலம் கரண்ட் பில் கட்டுப்படும்.
ஏ.சி.யில் இருக்கும் டைமரை 'ஆன்' செய்வது நல்லது. இதனால் அறை குளிர்ச்சியான உடன் ஏ.சி. தானாவே அணைந்துவிடும். இவ்வாறு தொடர்ந்து ஏ.சி. ஓடிக்கொண்டிருப்பது தவிர்க்கப்படுவதால் மின் செலவும் குறையும்.
வெளி வெளிச்சம் அதிகம் வராமல் தடுக்கும் வகையில் ஜன்னல்களுக்கு திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
அறை, ஹாலுக்கு தேவையான அளவு 'டன் ஏ.சி.யை பயன்படுத்துங்கள். குறைந்த உட்பரப்புக்கு. குறைவான 'டன்' ஏ.சி.யே போதும். 'இன்வெர்ட்டர்' ஏ.சி.யானது மின்சார பயன்பாட்டு அளவை குறைக்கும். எனவே அதை பார்த்து வாங்கலாம்.
No comments:
Post a Comment