சுவையான செட்டிநாடு வத்தக் குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
6 சின்ன வெங்காயம்
1தக்காளி
5 பூண்டு பற்கள்
1/2 டேபிள்ஸ்பூன் மிளகு
2 டேபிள்ஸ்பூன் தனியா விதைகள்
4 காய்ந்த மிளகாய்
1/4 டீஸ்பூன் வெந்தயம்
புளி சிறிய எலுமிச்சை பழ அளவு
அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு
அரை டீஸ்பூன்உளுத்தம் பருப்பு
4 தேங்காய் பத்தைகள்
தாளிப்பதற்கு
3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
சிறிதளவு கருவேப்பிலை
2 டேபிள்ஸ்பூன் சுண்டக்காய் வத்தல்
சமையல் குறிப்புகள்
1.கொடுத்துள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தேங்காய் வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொண்டு அதே கடையில் சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு புளி சேர்த்து வதக்கி ஆறவைத்து கொள்ளவும். இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
3.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை அரைத்து வைத்த விழுதை சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான செட்டிநாட்டு வத்த குழம்பு தயார்.
No comments:
Post a Comment