மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, June 21, 2024

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?

 மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?


முன்னர் எல்லாம், மாரடைப்பு என்பது 50+ வயதினருக்கானது என்று இருந்தது. இப்போதோ, வாழ்க்கை முறை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் இளம்வயது மாரடைப்பு சம்பவங்களையும் காண்கிறோம்.


 மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் சுயநினைவின்றி மயங்கி விழுகிறார் என்றால், உடனடியாக ஆம்புலஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 


பின்னர், பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் மற்றும் நாடித் துடிப்பு இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும். அவர் மூச்சு விடுவதை உறுதிப்படுத்த நாசிக்கு அருகில் விரல்களை வைத்தும், நாடித்துடிப்பை கழுத்தில் விரல்களை வைத்தும் கவனிக்க வேண்டும்.


 இவையிரண்டும் இல்லை என்றால், அவருக்கு இதயம் செயல்படுவது நின்றிருக்கலாம். இந்த மாதிரியான சூழலில் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக `சி.பி.ஆர்' (CPR - Cardio Pulmonary Resuscitation) முதலுதவி மூலம், நின்று போன இதயத் துடிப்பை மீண்டும் மீட்க முயற்சி செய்ய வேண்டும்.


CPR... எப்படிச் செய்ய வேண்டும்?


பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் முதலுதவி செய்பவரின் உள்ளங் கையை வைத்து அதற்கு மேல் மற்றொரு உள்ளங்கையை வைத்து, நெஞ்சுப்பகுதி நன்றாக அழுந்தும்படி 30 முறை இடைவிடாது அழுத்த வேண்டும். பின்னர், வாய்வழியாக இரண்டு முறை ஊதி சுவாசம் கொடுக்க வேண்டும். பின்பு, மீண்டும் நெஞ்சுப்பகுதியை 30 முறை இடைவிடாது அழுத்தி, இரண்டு முறை வாயின் வழியே சுவாசம் கொடுக்க வேண்டும். இப்படி இரண்டு சுற்றுகள் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, நாடித்துடிப்பு மீண்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.


மீண்டிருக்கவில்லை எனில், நாடித்துடிப்பு வரும் வரை இந்தச் செயல்முறையை செய்ய வேண்டும். முடிந்த அளவு வேகமாக CPR முதலுதவி செய்வதும் நல்லது.


மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவுடன் இருக்கிறார் எனில், அவருக்கு இடதுபுற நெஞ்சுப் பகுதியில் அதிகப்படியான அளவில் வலி இருக்கும். கூடவே, அந்த வலி இடதுபுற தோள்பட்டை, முதுகு எனப் பரவ ஆரம்பிக்கும்.


 பாதிக்கப்பட்ட நபர் படபடப்பாக, அதிக வியர்வை வெளியேறுவது போன்ற அறிகுறிகளுடன் காணப் படுவார். இந்த நேரத்தில், சிறிதும் தாமதிக்காமல் அவரை மருத்துவ மனை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குள், Aspirin 325 mg மாத்திரை ஒன்று, Clopidogrel 150 mg மாத்திரை இரண்டு, Atorvastatin 80 mg மாத்திரை ஒன்று என்ற அளவில் அவருக்கு, தண்ணீருடன் வாய்வழியாகக் கொடுக்கப்பட வேண்டும். இதய நோயாளிகள், இந்த மாத்திரைகளை கைவசம் வைத்திருக்கலாம்.


 இல்லாதவர்கள் அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து, மருத்துவமனைக்கு விரைய வேண்டும்.

No comments:

Post a Comment