மாதம் ரூ 65,000 ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, June 18, 2024

மாதம் ரூ 65,000 ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு

 மாதம் ரூ 65,000 ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு


திட்ட பொறியாளர், முதுகலை திட்ட பொறியாளர் பணியிடங்களை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் மேம்படுத்தப்பட்ட கணினி மேம்பாட்டு நிறுவனம் (சி-டிஏசி) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் சுகாதாரம், மின்-ஆளுமை, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து பயன்பாடுகள், தகவல் தொடர்பு, சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு,எம்எல்,டிஎல் மற்றும் பகுப்பாய்வு, ஸ்மார்ட் கார்டு-ஒஎஸ் மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்களைக் கையாண்டு வருகிறது.


இந்த நிலையில் நொய்டாவில் காலியாக உள்ள திட்ட பொறியாளர், முதுகலை திட்ட பொறியாளர் பணியிடங்களை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண். C-DAC/NOIDA/01/June/2024)


பணி: Program Manager


காலியிடங்கள்:2


பணி: Project Engineer


காலியிடங்கள்:36


பணி: Project Manager


காலியிடங்கள்: 2


தகுதி: கணினி அறிவியல், ஐடி, இசிஇ, இஇஇ, கணினி பாதுகாப்பு, மென்பொருள் தொழில்நுட்பம், கருவிகள், இயற்பியல், கணினி பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு(ஏஐ), தரவு அறிவியல், உயிர் தகவலியல், கிளவுட் கம்ப்யூட்டிங், நானோ தொழில்நுட்பம், புவி தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.


சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7.8 லட்சம்


வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.


பணி அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Senior Project Engineer (Electronics/ VLSI/ Microelectronics)


காலியிடங்கள்: 2


பணி: Senior Project Engineer (JAVA, J2EE Software/ Web Application Development, DevOps, Micro services Architecture)


காலியிடங்கள்: 17


சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.9.65 லட்சம்


வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.


பணி அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.6.2024



மேலும் விவரங்கள் அறிய 



https://careers.cdac.in/advt-details/ND-2952024-KDD5W



 கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment