ரூ.60,000 சம்பளத்தில் அரசு நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை(தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி) - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, June 2, 2024

ரூ.60,000 சம்பளத்தில் அரசு நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை(தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி)

 ரூ.60,000 சம்பளத்தில் அரசு நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை(தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி)


இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்.KP/S/05/2024


பணி: Staff Driver


காலியிடங்கள்: 4


சம்பளம்: மாதம் ரூ.16,900 - 60,650 வழங்கப்படும்.


தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி அனுபவம்: இலகுரக,கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டாரில் ஏற்படும் திடீரென ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை BEML Limited, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


 www.bemlindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழே நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


Sr.Manager(Corporate Recruitment), Recruitment Cell, BEML Soudha, No:23/1. 4th main Road, S.R.Nagar, Bangalore-560 027


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர கடைசி நாள்: 5.6.2024


மேலும் விவரங்களுக்கு 


https://www.bemlindia.in/wp-content/plugins/career/WCP/DATA//Writereaddata/Career/KP_S_05_2024%20-%20Final.pdf


 கிளிக் செய்யவும் அல்லது recruitment@bemilltd.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment