எச்ஏஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.46,511 சம்பளத்தில் வேலை வாய்ப்பு
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்)லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 182 டெக்னீசியன், ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்)லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 182 டெக்னீசியன், ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். A/HR/TBP/01/2024
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Diploma Technician (Mechanical) (Scale – D6) – 29
பணி: Diploma Technician Electrical/ Electronics/ Instrumentation (Scale – D6) – 17
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற பிரிவுகளில் பட்டயப் படிப்பை(டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.46,511 வழங்கப்படும்.
பணி: Operator (Fitter) (Scale – C5) – 105
பணி: Operator (Electrician) (Scale – C5) – 26
பணி: Operator (Machinist) (Scale – C5) – 2
பணி: Operator (Welder) (Scale – C5) – 1
பணி: Operator (Sheet Metal Worker) (Scale – C5) – 2
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,554 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.5.2024 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://hal-india.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.6.2024
மேலும் விவரங்கள் அறிய
https://hal-india.co.in/backend/wp-content/uploads/career/TBP%20NOTIFICATION%20FINAL_1716802041.pdf
கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment