குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் 2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, June 21, 2024

குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் 2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு

 குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் 2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு


செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி குரூப் 2 , குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கு நேற்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


"விண்ணப்பதாரர்கள் நேற்று (20-06-24) தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கும் 19ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை அறிய https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குரூப் 2 பதவிகள்:


*உதவி ஆய்வாளர்


*துணை வணிகவரி அலுவலர்


*இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்


*நன்னடத்தை அலுவலர்


*சார்பதிவாளர் நிலை II


*சிறப்பு உதவியாளர்


*தனி பிரிவு உதவியாளர்


*உதவிப் பிரிவு அலுவலர்


*வனவர்


என மொத்தம் 507 குரூப் 2 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


குரூப் 2ஏ பதவிகள்:


*தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர்


*முழு நேர விடுதிக்காப்பாளர்



*முதுநிலை ஆய்வாளர்


*தணிக்கை ஆய்வாளர்


*உதவி ஆய்வாளர்


*கைத்தறி ஆய்வாளர்


*மேற்பார்வையாளர் அல்லது இளநிலை கண்காணிப்பாளர்


*உதவியாளர்


*வருவாய் உதவியாளர்


*செயல் அலுவலர் நிலை II


*இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் தணிக்கை ஆய்வாளர்


*நேர்முக எழுத கணக்கர்


*இளநிலை கணக்கர்


*விரிவாக்க அலுவலர்


*கீழ்நிலை செயலிடை எழுத்தர்


என மொத்தம் 1820 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயதுவரம்பு:


 1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் அதிகபட்சம் பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற பிரிவினர் 42-க்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்பது 1.7.2024 அன்றோ அல்லது தெரிவு செய்யப்படும் நாளன்றோ அல்லது நியமனம் செய்யப்படும் நாளன்றோ தேர்வர் 60 வயதை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.


மேலும் அதிகபட்ச வயது வரம்பு துணை வணிகவரி அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு பொருந்தாது.


தகுதி: 


ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உயர்நிலை, மேல்நிலைப் படிப்பகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வனவர் பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:


 ரூ.100.முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100. முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

 https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.7.2024


முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள: 14.9.2024


மேலும் விவரங்கள் அறிய 


https://www.tnpsc.gov.in/Document/tamil/08_2024_Tamil.pdf



 கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment