இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர்,பள்ளிக் கல்வி பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் பணி:TNPSC அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 3, 2024

இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர்,பள்ளிக் கல்வி பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் பணி:TNPSC அறிவிப்பு

 இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர்,பள்ளிக் கல்வி பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் பணி:TNPSC அறிவிப்பு


இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி I-பி மற்றும் சி பணிகளான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவி: உதவி ஆணையர்


காலியிடங்கள்: 21


வயதுவரம்பு: அதிகபட்சம் 34 வயத்திற்குள் இருக்க வேண்டும்.


தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் சட்டப்பிரிவில் மூன்றாண்டு


இளங்கலை அல்லது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் குடிமை அல்லது குற்றவியல் வழக்குகளை நடத்தும் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் பயிற்சி வழக்குரைஞராக பயிற்சியிலிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை I, II, III,IV அல்லது ஆய்வாளர் அல்லது தலைமை எழுத்தர், கண்காணிப்பாளர் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும்.


பதவி: மாவட்டக் கல்வி அலுவலர்


காலியிடங்கள்: 8


வயதுவரம்பு: 


பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 42-க்குள்ளும் இருக்க வேண்டும்.


தகுதி:


 ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கலை கற்பித்தல் அல்லது இளங்கலை கல்வியியல்(பி.எட்) முடித்திருக்க வேண்டும் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் படிப்பகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: 


முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

 https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:22.5.2024


முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள:


 12.7.2024


மேலும் விவரங்கள் அறிய      


 https://www.tnpsc.gov.in/Document/tamil/05_2024_TAM_.pdf


செய்யவும்.

No comments:

Post a Comment