எந்த திசை நோக்கி சாப்பிடக்கூடாது? சாப்பிடும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, May 26, 2024

எந்த திசை நோக்கி சாப்பிடக்கூடாது? சாப்பிடும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது?

 எந்த திசை நோக்கி சாப்பிடக்கூடாது? சாப்பிடும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது?


சாப்பிடும் போது எப்படி சாப்பிட வேண்டும். எப்படி சாப்பிடக்கூடாது என்று நமது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சில திசைகளை நோக்கி சாப்பிட வேண்டும் சில திசைகளை நோக்கி சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். எந்த திசை நோக்கி சாப்பிட்டால் ஆயுள் வளரும் எந்த திசை நோக்கி சாப்பிடக்கூடாது என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.


நாம் சாப்பிடும் உணவு நமக்கு ஆரோக்கியத்தை தருவதாக இருக்க வேண்டும். பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்ட வாஸ்து சாஸ்திரத்தில் நான்கு திசைகளுக்கும் ஒரு சக்தி உள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளுக்கும் உள்ள ஆற்றலின்படி எந்த திசையை நோக்கி சாப்பிட்டால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.


சூரியன் உதயமாகும் கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள் வளரும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு திசை நோக்கி மட்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.


கிழக்கு திசையை நோக்கி சாப்பிட்டால் மூளை உற்சாகமடைவதோடு, உண்ணும் உணவு நன்கு செரிமானமாகி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த திசையை நோக்கி சாப்பிடுவது வயதானவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மிகவும் நல்லது. டென்சன், மன அழுத்தம் குறையும்.


மேற்கு திசையை நோக்கி சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மேற்கு திசையை நோக்கி சாப்பிட்டால், அது லாபத்திற்கு வழிவகுக்கும். அதே நேரத்தில் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போது மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் பகை உண்டாகும் என்ற ஒரு கருத்தும் உண்டு.


வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடும் போது சரியான முறையில் நமக்கு ஜீரணம் ஆகாது. இதனால் நமக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பல்வேறு குறைபாடுகள்வந்து சேரும். ஆகவே வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.


பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். அதே போல அளவாகவே சாப்பிட வேண்டும். நிறைய கிடைக்கிறது என்பதற்காக அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது அது ஆயுளை குறைத்து விடும்.


சாப்பிடும் முன்பாக கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment