சுவையான சாஃப்ட்டான ஆப்பம் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 10, 2024

சுவையான சாஃப்ட்டான ஆப்பம் செய்வது எப்படி?

 சுவையான சாஃப்ட்டான ஆப்பம் செய்வது எப்படி?


ஆப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது.  இந்த ஆப்பம் மாவை எப்படி அரைத்து எப்படி சாஃப்ட் ஆப்பம் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்


இட்லி அரிசி - 2 கப்


பச்சரிசி – 2 கப்


உளுந்து - 1 கப்


வெந்தயம் - 1 டீஸ்பூன்


தேங்காய் -1 /2 கப் (துருவியது)


இளநீர் – 2


உப்பு – தேவையான அளவு


செய்முறை


1. முதலில் அரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 கப் இட்லி அரிசி மற்றும் பச்சரிசி எடுத்துக்கொள்ளவும்.


2. பிறகு இவை வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.


3. அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாகதான் ஊற வைக்க வேண்டும். பிறகு அரைக்கும் போது அவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.


4. இவை சுமார் 4 மணி நேரம் ஊறிய பின்னர், கிரைண்டரில் முதலில் உளுந்தை போட்டு அரைக்கவும். அது பொங்க பொங்க தண்ணீரை தெளித்து ஆட்ட வேண்டும்.


5. உளுந்து முக்கால் பாகம் நன்கு அரைபட்ட பிறகு அரிசியை சேர்த்துக் கொள்ளவும். இவை இரண்டும் நன்கு அரைப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.


6. எந்த அளவிற்கு மாவு நைஸாக அரைக்கிறோமோ அந்த அளவிற்கு ஆப்பம் மெத்தென்று மிருதுவாக வரும். இதில் தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


7. இவற்றை நன்கு அரைத்த பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த மாவு சுமார் 8 மணி நேரம் கழித்து நன்கு புளித்து பொங்கி வரும்.


8. அதன் பிறகு ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி, ஒரு துணியால் அந்த கடாயை தேய்க்கவும்.


9. பின் ஒரு கரண்டி ஆப்ப மாவை ஊற்றி, ஒரு முறை வட்டமாக ஆப்பம் வருவது போல் சுற்றி, பின்பு  2-3 நிமிடம் மூடவும். முறுகலாக வரும் போது அதனை எடுத்து பரிமாறவும்.


10. இப்போது சுவையான சாஃப்ட்டான ஆப்பம் ரெடி. இதனை தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment