படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானதா? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 22, 2024

படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானதா?

 படிக்கட்டுகளில் ஏறி  இறங்கும் உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானதா?


படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இதயத்திற்கும் நல்லது. படிக்கட்டுகள் ஏறும்போது கால்கள் மற்றும் தசைகள் அதில் பங்கேற்கும். இது இதயத் துடிப்பை உயர்த்தி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் முழுவதும் சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.


படிக்கட்டுகள் ஏறுவது உடல்நலன் தொடர்பானது. படிக்கட்டு ஏறுதல் மற்றும் நடைபயிற்சி இரண்டையும் கூட செய்யலாம். படிக்கட்டுகள் ஏறுவது உடலின் மெட்டாபாலிசத்தை சீராக இயங்க வைக்கும். தசை வளர்ச்சி அடையும். கூடவே உடல் எடையை நிர்வகிப்பதற்கும் உதவும்.


பணி சூழல், அவசரமான வாழ்வியல் முறை ஆகியவற்றின் காரணமாக உடற்பயிற்சி யோகா உள்ளிட்டவைகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது எளிதானதாக இருக்காது. இருப்பினும், அதை பழக்கப்படுத்த வேண்டும். காலையில் எழுந்து விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். மாடிப் படி இருந்தால் அதில் ஏறி இறங்கலாம்.


படிக்கட்டுகளில் ஏறி செய்யும் உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்:


* படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும்போது உங்களின் முட்டிக்கால், நெஞ்சு பகுதியில் உள்ள தசைகள் நன்றாக இயங்கும். இது `standing crunches' செய்வது போல. தொடர்ந்து செய்தால் தசை வலுப்பெறுவதுடன் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு குறையும். உடலின் கீழ் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.


* உடலின் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு வளர்சிதை மாற்றத்திற்கும் இது நல்லது . நடைப்பயிற்சி எவ்வளவு நல்லதோ அதே அளவு படிக்கட்டுகளில் ஏறி உடற்பயிற்சி செய்வது நல்லது.


* இந்த முறை உடற்பயிற்சியால் கலோரி எரிக்கப்படுகிறது. அடிவயிற்றில் உள்ள தசைகளை நன்றாக செயல்பட தூண்டுவதால் செரிமான தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.


* எல்லாரும் நடைப்பயிற்சி செய்யலாம். ஏனெனில், சிலருக்கு படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் உடற்பயிற்சி செட் ஆகாது. வயதானவர்கள், மூட்டு பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இது உகந்தது அல்ல. மேலும் படிக்கட்டுகளில் ஏறுவதால் சோர்வாக உணர்ந்தால் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.


எந்தவொரு உடல் செயல்பாடும் எண்டோர்பின்களை வெளியிடுவதற்கு வழிவகுக்கிறது. மன அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. எதையேனும் தொடர்ச்சியாக செய்வது உடல்நலனுக்கு நல்லது.

No comments:

Post a Comment