சுவையான மசாலா பாஸ்தா செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 24, 2024

சுவையான மசாலா பாஸ்தா செய்வது எப்படி?

 சுவையான மசாலா பாஸ்தா செய்வது எப்படி?


பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் மசாலா பாஸ்தாவை செய்யலாம். பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற, அவற்றுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்: 


* மக்ரோனி பாஸ்தா - 1 கப்


* தக்காளி - 2 (நறுக்கியது) 


* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)


   * குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)


* சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது) 


* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 


* சீரகம் - 1/2 டீஸ்பூன்


* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்


     * மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் 


* கொத்தமல்லி - சிறிது


செய்முறை:


 * முதலில் தக்காளியை நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பாஸ்தாவை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பாஸ்தாவை மென்மையாக வேக வைக்க வேண்டும்.


* பாஸ்தா வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.


    * பின்பு அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.


 * பின் கேரட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 



* அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.


    * பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்..


* இறுதியாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மசாலா பாஸ்தா தயார்.

No comments:

Post a Comment