பழ ஜுஸை யார் யார் எந்த அளவு குடிக்க வேண்டும்? அதிகம் குடித்தால் ஆபத்தா? - Minnalseithi

Latest

Search This Blog

Monday, May 6, 2024

பழ ஜுஸை யார் யார் எந்த அளவு குடிக்க வேண்டும்? அதிகம் குடித்தால் ஆபத்தா?

 பழ ஜுஸை யார் யார் எந்த அளவு குடிக்க வேண்டும்? அதிகம் குடித்தால் ஆபத்தா?


வீடுகளில் அல்லது கடைகளில் தயாரிக்கும் ஜூஸ், புராசெஸ்டு ஜூஸ், பவுடர் ஜூஸ் என ஜூஸ்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.


 இந்த ஜூஸ் வகைகளில் பவுடர் ஜூஸ் மற்றும் புராசெஸ்டு  ஜூஸ்களை முடிந்தளவுக்குத் தவிர்ப்பது  நல்லது.


 'அப்படியானால்  வீட்டில் தயாரிக்கும் ஜூஸை எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாமா?' என்றால் அதற்கும் அளவுகள் உண்டு.


ஒரு நாளில் ஓர் ஆண் 2 கப் ஃப்ரெஷ் ஜூஸும்,  ஒரு பெண் 1 1/2 கப் ஜூஸும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு 1 கப் ஜூஸ் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.


காரணம் என்ன?


ஜூஸை பொறுத்தவரை, அதில் வைட்டமின் மற்றும் மினரல்களை தவிர புரதச்சத்து மாதிரியான வேறு சத்துகள் அதிகம் இல்லை. இதனால் ஒரு நாளில் நாம்  அதிக அளவில் ஜூஸ் எடுத்துக்கொண்டே இருந்தால் வேறு எதையும் சாப்பிட முடியாமல் போய்விடும். வேறு சத்தும் உடம்பில் சேராமல் போய்விடும். 


என்னென்ன சத்துகள்?


ஆரஞ்சு, நெல்லிக்காய் மாதிரியான சிட்ரஸ் பழ ஜூஸ் குடிக்கும்போது வைட்டமின் சி உடலில் சேரும். தக்காளிப்பழ ஜூஸும் வைட்டமின் சி தரும். மாதுளம்பழம் ஜூஸ் குடிக்கும்போது வைட்டமின் கே உடலில் அதிகரித்து ரத்த உறைவிற்கு உதவும். மேலும், எந்தப் பழ ஜூஸ் குடித்தாலும் நமக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் கூடும். 


அதிகம் குடித்தால் என்ன ஆகும்?


வெறும் ஜூஸாகவே குடித்துக்கொண்டிருந்தால் உடல் எடை அதிகரிக்கலாம். மேலும், அதில் உள்ள ஃப்ரக்டோஸ் என்ற இனிப்புச்சத்து, பற்களின் எனாமலை பாதித்து பற்களை சொத்தை ஆக்கலாம். 


இதெல்லாம் முக்கியம்...


சர்க்கரை நோயாளிகள் ஜூஸாக குடிக்காமல் பழமாகச் சாப்பிடுவது தான் நல்லது. இது அவர்களின் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.


பீட்ரூட்  அலர்ஜி இருப்பவர்கள் பீட்ரூட்டை பாதி வேக வைத்து அரைத்துக் குடிக்கலாம்.


ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களில் உள்ள தோல்களை நீக்காமல், அப்படியே அரைத்துக் குடிப்பதால் நார்ச்சத்து சேரும்.


பழ ஜூஸ்களில் சர்க்கரை சேர்க்காமல் புதினா, எலுமிச்சை பழங்களை சுவைக்குச் சேர்க்கலாம்.


 சர்க்கரை சேர்ப்பதால் கலோரிகள் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இப்படி ரெடி பண்ணுங்க...


ஜூஸ் தயாரிக்கும்போது பழங்களை சுத்தமாகக் கழுவ வேண்டும்.  மஞ்சள் தூள் கலந்த நீரில் கழுலாம். சுத்தமான பாத்திரங்களையே  பயன்படுத்த வேண்டும். ஜூஸ் தயாரிக்கும் நபர் கூட சுத்தமாக இருப்பது அவசியம். ஜூஸைத் தயாரித்த உடனே குடிக்கும்போதுதான் முழுச்சத்தும் கிடைக்கும்.

No comments:

Post a Comment