சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 18, 2024

சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?

 சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்


30 +15 நிமிடங்க

 4 பேர்


1டம்ளர் நொய்யரிசி (பச்சை)


1/4 டம்ளறுக்கு மேல் கொஞ்சம் சேர்த்து பாசிப்பருப்பு


10 முந்திரி பருப்பு


1 ஸ்பூன் இஞ்சி


1 ஸ்பூன் மிளகு


1 ஸ்பூன் சீரகம்


1 ஸ்பூன் பெருங்காயத்தூள்


1/4 கப் நெய்


1 கப் காய்ச்சிய பால்


தேவையான அளவு உப்பு


சிறிதளவு கறிவேப்பிலை


செய்முறை 


ஒரு டம்ளர் நொய்யரிசி மற்றும் கால் டம்ளர் க்கு மேல் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பாசி பருப்பு இரண்டையும் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.


 இவற்றை அரை மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.


பிறகு தாளிக்க தேவையான இஞ்சி மிளகு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயத் தூள் முந்திரி பருப்பு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். 


கால் கப் அல்லது தங்களுக்கு தேவையான அளவு நெய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


அரிசி ஊறியவுடன் நன்கு தண்ணீர் வடித்து விடவும்.


ப்ரஷர் பேனில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு இந்த வடித்த அரிசி பருப்பை சேர்த்து சூடு வர வறுத்து கொள்ளவும்.


 பிறகு 5 தம்ளர் தண்ணீர் வரை சேர்த்து தூள் உப்பு அல்லது கல்லுப்பு சேர்த்து நான்கு முதல் ஐந்து சவுண்ட் வரை வேக விடவும்.


இதற்கிடையில் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் பொடியாக அரிந்த இஞ்சி ,மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் முந்திரிப் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.


 அடங்கிய பின் மூடியைத் திறந்து விட்டு கெட்டியாக பொங்கல் இருந்தால் அதில் ஒரு கப் அல்லது அதற்கு மேலும் கொஞ்சம் பால் சேர்த்து நன்கு இழுத்து கிளறிவிடவும். பால் சேர்ப்பதால் பொங்கல் சுவையும் நன்றாக இருக்கும்.


பிறகு தாளித்த முந்திரிப்பருப்பு தாலிப்பை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி விடவும் உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும்.


 மீதியுள்ள நெய்யை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.


 சூடாக சட்னி-சாம்பார் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment