எப்போது உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது?
நமது அன்றாட வேலைகளில் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைப்பதே மிக அரிதாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் எப்போது உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது என்ற கேள்வி பலருக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது.
உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்பது ஒவ்வொரு நபருக்கு உள்ள நேர வாய்ப்புகள் மற்றும் அவர்கள் வேலைகளை பொறுத்து மாறுபடுகிறது.
சிலர் காலை நேர பயிற்சி சிறந்தது என்றும், ஒரு சிலர் மாலை நேர பயிற்சியே சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவிக்கின்றனர். இதில் மாலை நேர உடற்பயிற்சி மூலமாக கூடுதல் பலன் கிடைக்கிறது. மாலை நேர உடற்பயிற்சி பலன்களை இங்கு காணலாம்.
* மாலை நேர பயிற்சிகள் நல்லதொரு புத்துணர்ச்சியை தரும். மாலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படுகிறது.
* அலுவலகப் பணியாளர்களாக இருப்பவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கின்றனர். அப்படி இருக்கும்போது நம் தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள சோர்வு நீங்குகிறது. மேலும் இரவில் தடையற்ற நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
* தினசரி பணிகள் பெரும்பாலும் பகல் பொழுதிலேயே முடிந்து விடுவதால் மாலையில் உடற்பயிற்சி செய்ய நீண்ட நேரம் கிடைக்கும்.
* காலை நேர உடற்பயிற்சிகளைக் காட்டிலும் மாலையில் இன்னும் சிறப்பாக உடற்பயிற்சி செயல்பட முடியும். மாலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் மன நெருக்கடி ஏற்படாமல் பயிற்சிகளை செய்ய முடியும்.
* மாலையில் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்கும். உடல் எடை குறைக்க விரும்பும் நபர்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி பலன் கொடுக்கும்.
No comments:
Post a Comment