எலெக்ட்ரிக் வாகனங்கள் திடீரென்று தீப்பற்றி எரிவது ஏன்? எவ்வாறு தவிர்க்கலாம்..? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 18, 2024

எலெக்ட்ரிக் வாகனங்கள் திடீரென்று தீப்பற்றி எரிவது ஏன்? எவ்வாறு தவிர்க்கலாம்..?

 எலெக்ட்ரிக் வாகனங்கள் திடீரென்று தீப்பற்றி எரிவது ஏன்? எவ்வாறு தவிர்க்கலாம்..?


எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரிக்கள் எத்தனை வாட்டி Full charge செய்யப்பட்டது என்பதைப் பொருத்துதான் அதன் Lifetime கணக்கிடுவார்கள். 50%, 60% மீதமிருக்கையிலேயே மீண்டும் சார்ஜ் செய்தோம் என்றால் ஹீட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


சமீபகாலமாக சாலைகளில் கார்கள் தீப்பற்றி எரிவதை அடிக்கடி பார்த்து வருகிறோம். பார்த்து பார்த்து வாங்கிய கார் தீப்பற்றி எரிவதை யாரால் தான் பொறுத்துக்கொள்ள முடியும். தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.


பொதுவாக வாகனங்கள் ஏன் தீப்பற்றி எரிகின்றன, அதற்கான காரணம் என்ன, வெயிலும் ஒரு காரணம் தானா? இதுபோன்ற பல்வேறு இருக்கின்றன.


திடீரென்று பற்றி எரிவது ஏன்?


எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் பேட்டரிகள்தான் பயன்படுத்துவார்கள். சாதரணமாக செல்போன்களில் பயன்படுத்தும் பேட்டரிகளும் கிட்டத்தட்ட அந்த வகையைச் சேர்ந்ததுதான். சமீபகாலமாகத்தான் பேட்டரிகளில் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள்.


உதிரி பாகங்களை மாற்றும்போது கவனம்


நம்முடைய செல்போன்களும் வெயிலில் கொஞ்ச நேரம் வைத்துவிட்டால் சூடாகிறது தானே. இது கார்களுக்கும் பொருந்தும். இரண்டாவது அதிகம் உபயோகப்படுத்துவது. எலெக்ட்ரானிக் வாகனங்கள் சாதாரண வாகனங்களின் என்ஜின்களைப் போல் அல்ல. தொடர்ச்சியாக அதிகமாக உபயோகிக்கும்போது அதன் காரணமாகவும் பேட்டரி ஹீட் ஆகும். மூன்றாவது, OE (Original Equipment) என்று சொல்லுவோம், இத்தகைய பொருட்களின் தரம் என்பது சந்தையில் விற்பனையாகும் பொருட்களில் இருக்காது. எனவே கார்களில் உதிரி பாகங்களை மாற்றும்போது அதன் Original பாகங்களாக மாற்றுவது இன்னும் சிறப்பானது.


கார்கள் திடீரென எரிவது பேட்டரிகளால் மட்டுமல்ல. short circuitகளாலும் இருக்கலாம். சாதரணமாக டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் கூட சாலைகளில் திடீரென எரிவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் இதை முன்கூட்டியே அவதானிப்பது என்பது சற்று கடினமானதுதான். ஆனால் நாம் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் அபாயங்களை தவிர்க்கலாம். பெட்ரோல் டீசல் கார்களில் இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களில்தான் நாம் அதிகமாக இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்துள்ளோம்.


கார்களை நிழலில் நிறுத்தாமல் திறந்தவெளி பார்க்கிங்கில் நிறுத்துபவர்கள், காருக்குள் இருக்கும் ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், சோடா கேன்கள், செல்போன்கள், சார்ஜிங் கேபிள்கள், லேப்டாப்கள் போன்றவற்றை நேரடியாக சூரிய ஒளியில் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அல்லது திறந்தவெளி பார்க்கிங் செய்யப்பட்ட கார்களில் இதை வைத்துவிட்டுச் செல்லாமல் இருப்பது நல்லது. கார் திடீரென பற்றி எரிவதற்கு இது முதன்மையான காரணம் அல்ல. ஆனாலும் சாத்தியக்கூறுகள் உள்ளன.


சார்ஜிங்கின் போது கவனம்


சரியான இடைவேளைகளில் கார்களை சர்வீஸ் செய்வது பாதுகாப்பானதாக இருக்கும். திறந்தவெளி பார்க்கிங்கை பயன்படுத்தாமல் மரநிழல் அல்லது நிழல்களில் கார்களை பார்க்கிங் செய்வது பாதுகாப்பானது. எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் போடும்போது, முழுவதும் ஜார்ஜ் ஆகிவிட்டால், ஜார்ஜரில் இருந்து துண்டித்துவிடுவது நல்லது. தொடர்ச்சியாக சார்ஜிங்கில் இருந்தாலும் கூட, அதுவாகவே சார்ஜ் ஆவதை நிறுத்திக் கொள்ளும். ஆனாலும் சில சமயங்களில் பேட்டரி ஹீட் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் சார்ஜ் ஆகிவிட்டால், ஏறத்தாழ அதை முழுவதும் பயன்படுத்திய பின் மீண்டும் சார்ஜ் செய்வது நல்லது. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரிக்கள் எத்தனை வாட்டி Full charge செய்யப்பட்டுள்ளது என்பதைப் பொருத்துதான் அதன் Life time கணக்கிடுவார்கள். 50%, 60% மீதமிருக்கையிலேயே மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்தோம் என்றால் ஹீட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


இதையெல்லாம் தவிர்த்துவிட்டால் வாகனங்களில் பிரச்சனை இருக்காது என்றெல்லாம் சொல்லமுடியாது. பெரும்பாலும் circuitகளாலும் பேட்டரிகளாலும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முடிந்தவரை அதை தடுப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதுதான் நமக்கு நல்லது.

No comments:

Post a Comment