உடல் எடையைக் குறைக்கும் சிறந்த உணவுகள்
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைக்கு ஏராளமான இளைஞர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதி அடைந்து வருகிறார்கள்.
உடல் பருமன் பிரச்சனை ஏற்படும் போது இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளும் வருகிறது.
இதில் இரத்த அழுத்தம் அதிகமானால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் எப்போதும் வைத்திருப்பது உடல் நலனிற்கு சிறந்தது.
அதையடுத்து, உடல் பருமனாக இருப்பவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் கவனமாக இருப்பதுடன், உடல் எடையைக் குறைப்பதற்கான சில எளிய உடற்பயிற்சிகளை செய்வது நல்லது.
இந்நிலையில் உடல் பருமனை குறைப்பதற்கு தேவையான உணவுகள் குறித்து பார்க்கலாம்.
வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறையும்.
பசலைக்கீரையில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பப்பாளிக் காயை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
கோடையில் அதிகம் கிடைக்கும் முலாம் பழம் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.
இரவு முழுவதும் தண்ணீரில் கொள்ளை ஊற வைத்து காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.
ஊற வைத்த அவலை சாப்பிட உடல் எடை குறையும்.
வெள்ளை நிற பீன்ஸ் உடல் எடையைக் குறைக்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது.
நீர் முள்ளியை வெயிலில் உலர்த்தி வைத்து உப்பு எடுக்க வேண்டும். அந்த உப்பை கரைத்து காலை, மாலை எடுத்துக் கொள்ள உடல் எடை குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும்.
உடல் எடை குறைய கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.
No comments:
Post a Comment