வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்:வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையுமா?
உடல் எடை குறைக்க மிகவும் எளிதான வழி வெந்நீர் குடிப்பது என்று சொல்லப்படுகிறது. ஆனால் உடல் எடை குறைய உடற்பயிற்சி, உணவுக் காட்டுபாடு போன்றவற்றுடன் வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பது பலன் தரும்.
வெந்நீர் உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது என்பது உண்மைதான் ஆனால் அது மட்டுமே இரண்டு வாரங்களில் 20 கிலோ வரைக்கும் எடை குறைக்க உதவாது.
காலையில் சற்று வெதுவெதுப்பான நீரைக் குடிக்கும்போது, உடல் அதன் வெப்பநிலையை மாற்றி வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது, வயிற்றை நிரம்பி அதிக கலோரிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேனை சேர்ப்பதன் மூலம், உடல் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேலும் துரிதப்படுத்த முடியும்.
பொதுவாக சூடான நீர் உடலின் வெப்பநிலையை உயர்த்தி வியர்வையை ஏற்படுத்தி உடலின் நச்சுக்கள் வெளியேற உதவுகிறது.
மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீர்த்துப்போகச் செய்ய உதவுகிறது. இதன் மூலம் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதை எளிதாக்குகிறது.
உடல் எடை குறைய சுடுதண்ணீர் எவ்வாறு குடிக்க வேண்டும் ?
வெந்நீர் உடல் எடையை குறைப்பதில் உதவுகிறது. இருப்பினும் அதில் சில பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் எடை இழப்பைத் துரிதப்படுத்தலாம். அவை
பூண்டு:
பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மேலும் பூண்டு சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது, எடை இழப்புக்கு பூண்டு நல்லது.
எலுமிச்சை:
சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிப்பது சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆதரவு மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக உதவுகிறது. மேலும், எலுமிச்சை சாறு கொழுப்பை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேன் :
தேன் ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிகான்சர், ஆண்டிடியாபெடிக், ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபராசிடிக் தாக்கங்களுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற பல பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதில் உதவுகிறது.
வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்:
வெதுவெதுப்பான நீரை குடிப்பது மலத்தை மென்மையாக்கி, எளிதாக வெளியேற்றுவதற்கு உதவுகிறது. மேலும், குடல் ஆரோக்கியம் மற்றும் சீரான இயக்கத்தை சீராக்கி உடலில் இருந்து நச்சுகளை முழுமையாக அகற்றுவதற்கு உதவுகிறது.
வெதுவெதுப்பான நீர், இருமல் மற்றும் சளியின் போது சளி உருவாவதைக் குறைக்கிறது. மேலும், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் சமயங்களில் நிவாரணம் பெற உதவுகிறது.
எண்ணெயில் பொறித்த நொறுக்குத் தீனிகளை உண்ணும்போது, அதை ஜீரணிக்க சிறந்த வழி வெந்நீரைக் குடிப்பதாகும். ஏனென்றால், இது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.
வெந்நீரை சருமத் துவாரங்களை சுத்தமாக்கி, முகப்பரு மற்றும் தோல் தொடர்பான பிற பிரச்சனைகளை குறைக்கிறது. இதன் மூலம் சருமம் பளபளப்பாகவும், தெளிவாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.
சூடான நீர் குடிப்பது தசைகள் பாதிப்பு உடையவர்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைப்பதற்கு உதவுகிறது.
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது. ஏனெனில் இது உடல் வளர்சிதை மாற்றத்தை உடனே ஆரம்பித்து வைக்கிறது. சாப்பிட்டவுடன் சற்று வெது வெதுப்பான நீர் குடிப்பது எளிதாக ஜீரணம் ஆக உதவுகிறது.
No comments:
Post a Comment