சில எளிய வீட்டு வைத்தியங்கள்...! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 31, 2024

சில எளிய வீட்டு வைத்தியங்கள்...!

 சில எளிய வீட்டு வைத்தியங்கள்...!


ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்தால் தொண்டை கரகரப்பு மறைந்துவிடும்.ஓமத்தை வறுத்து அதனுடன் அரைப்பங்கு உப்பும், கால் பங்கு வெல்லமும் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்கி, ஒரு உருண்டைவீதம் சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை அகலும்.திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.


சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவைகளை குறைக்கிறது.தாய்பால் சுரக்காத பெண்கள், அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும். பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனை கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பனீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.


பெண்களின் வயிற்று சதை குறைய, சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் இழைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்.தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..


இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும். பேன் பொடுகு அகலும்..

மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.

No comments:

Post a Comment