குங்குமத்தைப் பெண்கள் இட்டுக்கொள்வது எப்படி?நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைப்பதன் அவசியம் என்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 29, 2024

குங்குமத்தைப் பெண்கள் இட்டுக்கொள்வது எப்படி?நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைப்பதன் அவசியம் என்ன?

 குங்குமத்தைப் பெண்கள் இட்டுக்கொள்வது எப்படி?நெற்றி வகிட்டிலும் குங்குமம்  வைப்பதன் அவசியம் என்ன?


மங்கலம் நிறைந்தது குங்குமம். குங்குமம் அணிந்த ஒருவரை, எவ்வித தீவினை சக்திகளாலும் வயப்படுத்த முடியாது. மண்டை ஓட்டின் அடியில் எல்லா நரம்புகளின் சந்திப்பு இருக்கிறது. `அதிபம்’ எனும் அந்த ஸ்தானத்தைக் காக்க குங்குமம் அணிவது அவசியம்! இப்படி குங்குமம் குறித்த அபூர்வ தகவல்களை விவரிக்கின்றன ஞானநூல்கள்.


மங்கல குங்குமத்தைப் பெண்கள் இட்டுக்கொள்வது எப்படி, ஆண்கள் குங்குமத் திலகம் தரிக்கலாமா? வகிட்டில் குங்குமம் வைப்பதன் ரகசியம் என்ன? விரிவாக அறிவோமா?


பூவும் பொட்டும் கூந்தலும் அழகுப் பொருள்கள் அல்ல; பொக்கிஷம். செந்தூரம் அணிவதால் குறைகள் விலகி, கணவனோடு நீண்டு நெடிது வாழும் பாக்கியம் கிடைத்து விடும் என்று தர்மசாஸ்திரம் கூறும்.


விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண் ணெய் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினை புரிவதால் சிவப்பு நிறத்தைப் பெறுகிறது குங்குமம்.


மணமானவர்களின் வரவேற்பில் குங்குமம் முதலிடம் பெறுகிறது. அன்றாடம் சந்திக்கும் பெண்கள், வீட்டில் இருந்து விடைபெறும்போது குங்குமம் அளித்து வழியனுப்புவது வழக்கம். தர்மசாஸ்திரம், சம்பிரதாயமாக மாறிய பண்பாடு அது.


பெண்மணிகள் வகிட்டில் செந்தூரம் அணியும் கலாசாரம் பாரதம் முழுக்கப் பரவியிருந்தது. பாரதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை, உலக சுகங்களைச் சுவைப்ப தோடு நின்று விடுவதில்லை. ஆன்மிகத்தில் முடியும் மிக நீண்ட பயணம் அது.


பெண்மணிகள் வகிட்டில் செந்தூரம் அணியும் கலாசாரம் பாரதம் முழுக்கப் பரவியிருந்தது. பாரதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை, உலக சுகங்களைச் சுவைப்ப தோடு நின்று விடுவதில்லை. ஆன்மிகத்தில் முடியும் மிக நீண்ட பயணம் அது.


சீதையும் அனுமனும் உரையாடுகிறார்கள். சீதையின் வகிட்டில் செந்தூரத்தைப் பார்த்து அனுமன் ஆச்சரியத்தோடு கேட்டான்:


‘‘தாயே, தங்கள் வகிட்டில் செந்தூரத்தை ஏன் வைத்திருக்கிறீர்கள்?’’


‘‘இதை இட்டுக் கொண்டால் என் கணவர் நீண்ட ஆயுளோடு விளங்குவார்’’ என்று பதில் வந்தது.


‘‘அப்படியானால் என் ஸ்வாமி (ராம பிரான்) நீண்டநாள் வாழ நான் உடல் பூராவும் செந்தூரத்தை அணிந்து கொள்கிறேன்’’ என்று ராம பக்தியில் கட்டுண்ட அனுமன் செந்தூரத்தை அணிந்துகொண்டான். அத்புத ராமாயணத்தில் வரும் தகவல் இது.


அம்பாளை தியானம் செய்ய முற்பட்ட வியாசர், `செந்தூராருண விக்ரஹாம்' என்று ஆரம்பிக்கிறார். மாங்கல்யப் பெண்டுகளுக்கு குங்குமம், செந்தூரம் அணிவிப்பது உண்டு. முன்னோர்களின் நினைவு நாளில் செந்தூரம் அளிக்க வேண்டும். `ஸ்த்ரீ ணாம் ஆத்தேது ஸிந்தூரம்’ என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது.


பெண்கள் நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும். வகிடு அமைக்கும் இடத்தில் சுழி இருக்கக் கூடாது என்று சாமுத்ரிகா சாஸ்திரம் சொல்லும். சுழி இருந்தால் வகிடு சரியாக அமைக்க இயலாது. குழந்தை பிறக்கும் போதே தென்படும் ரோமாவர்த்தத்தை அதாவது வகிடு அமைக்கும் இடத்தில் காணப்படும் இடச் சுழியை மாற்ற இயலாது. மாற்றாக, செந்தூரம் அணிவது மரபு.


மண்டை ஓட்டின் அடியில் எல்லா நரம்புகளின் சந்திப்பு இருக்கிறது. அதற்கு ‘பிரம்மரந்திரம்’ என்று பெயர். அந்த இடத்தை ஆயுர்வேதம், ‘அதிபம்’ என்கிற மர்ம ஸ்தானமாகக் கூறும். அதற்கு நேர் மேலே இருக்கும் சீமந்தத்தில் வகிடு அமைத்து செந்தூரம் அணிவதை மர்ம ஸ்தானத்தின் பாதுகாப்பாகக் கருதுகிறது ஆயுர்வேதம்.


பெண்கள், குங்குமம் இடுவதால், மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால்தான் இடவேண்டும். குங்குமம் ஆரோக்கியமான நினைவு களைத் தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வயப்படுத்துவது கடினம்.


தெய்வத்தன்மையும் மருத்துவத் தன்மையும் உள்ள குங்குமத்தை அணிவதால் முகம், உடல் மற்றும் மனதுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.


மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்தச் சூடு தணிகிறது.


திருமணமான பெண்கள் நெற்றியின் நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது விசேஷம்!

No comments:

Post a Comment