வயிற்று வலியை உடனடியாக குணமாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
தேவையான பொருட்கள்
முள்ளங்கிக் கீரை - தேவையான அளவு
வெந்தயம் ஊறவைத்த நீர். - சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான அளவு முள்ளங்கிக் கீரையை எடுத்து சுத்தப் படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெந்தயத்தை ஊற வைத்து அந்தத் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த வெந்தய நீருடன் சுத்தப்படுத்திய முள்ளங்கிக் கீரையைச் சேர்த்து அரைத்து விழுதாக்கி எடுத்துக் கொள்ளவும்.
தீரும் குறைபாடுகள்
வயிற்று வலியினால் துன்பப்படும் பொழுது குணப்படுத்த உதவக் கூடியது.
சாப்பிடும் முறை
இவ்வாறு மேற்கூறியமுறையில் தயாரித்த முள்ளங்கிக் கீரை விழுதை வயிற்று வலியினால் துன்பப்படும் பொழுது அரைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி உடனே குணமாகும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment