வைகாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் தெரியுமா?
திருவண்ணாமலையில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு மலையே சிவபெருமானாக குடி கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
கிரிவல நன்மைகள்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ள கிரிவலப் பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என கூறப்படுவதாலும் மழையே சிவபெருமானாக குடி கொண்டுள்ளதாலும் இங்கு பௌர்ணமி நாட்களில் கிரிவலம் மேற்கொண்டால் அனைத்து பாவங்களும் நீங்கி நினைத்தது கிட்டும் என்பது நம்பிக்கை.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாளில் இங்கு கிரிவலம் செல்கின்றனர்.
வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்:
அந்த வகையில் தற்போது வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 22ஆம் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு பௌர்ணமி தொடங்கி 23ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.
பெளர்ணமி என்றாலும், கிரிவலம் என்றாலும் அனைவரின் நினைவிற்கு வரும் தலம் திருவண்ணாமலை தான். திருவண்ணாமலையில் அனைத்து நாட்களும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் சில குறிப்பிட்ட நாட்களில் கிரிவலம் வருவதால் பாவங்கள் அனைத்தும் நீங்கும், வாழ்வில் ஏற்றம் வரும், மறுபிறவி இல்லாத முக்தி நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் தலங்கள் பலவற்றிலும் கிரிவலம் செல்லும் வழக்கம் இருந்தாலும், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதை பிறவிப் பயனாக கருதி லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
திருவண்ணாமலையில் அனைத்து மாதங்களிலும் வரும் பெளர்ணமி அன்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசப்பது சிறப்பானதாகும். நினைத்தாலே முக்தியை தரக் கூடியக் கூடிய தலமாகவும், பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பெளர்ணமியில் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமியில் கிரிவலம் வந்தால் அண்ணாமலையாரின் அருளுடன் சித்தர்களின் ஆசியும், தரிசனமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அனைத்து பெளர்ணமிகளிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பானது என்றாலும், சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமி அதிக விசேஷமானதாகும். அப்படி வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமி திதி, முருகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாக திருநாளாக கொண்டாடப்படுவதால் இந்த நாளில் கிரிவலம் வருவதால் சிவன், பார்வதி, முருகன் ஆகியோரின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். முருகப் பெருமான் அவதரித்த நாளில் புண்ணியத் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் மிகவும் உயர்ந்த புண்ணியத்தை தரும்.
அருணகிரிநாதரின் வாழ்க்கையையே மாற்றி, திருப்புகழ் உருவான தலம் திருவண்ணாமலை. அதனால் வைகாசி விசாகத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் தலையெழுத்தே மாறும். வாழ்க்கையில் வசந்தம் வரும் என்பது ஆன்றோர்களின் வாக்காகும். இந்த ஆண்டு வைகாசி பெளர்ணமி மே 23ம் தேதி வருகிறது. மே 22ம் தேதி புதன்கிழமை இரவு 07.16 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி வியாழக்கிழமை இரவு 07.51 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. ஆனாலும் மே 23 ம் தேதி காலை 09.43 மணியுடன் விசாகம் நட்சத்திரம் நிறைவடைந்து விடுகிறது.இதனால் வைகாசி விசாகம் இந்த ஆண்டு மே 22ம் தேதியும், பெளர்ணமி மே 23ம் தேதியும் வருகிறது. திருவண்ணாமலையில் வைகாசி பெளர்ணமி கிரிவலம் செல்பவர்கள் மே 22 ம் தேதி இரவு 07.15 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி இரவு 8 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
No comments:
Post a Comment