பிஇ, பி.டெக், பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு
மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட உள்ள உதவி இயக்குநர், துணை ஆணையர், துணை இயக்குநர், உதவிக் கட்டுப்பாட்டாளர், பயிற்சி அலுவலர், உள்துறை வடிவமைப்பு மற்றும் அலங்காரம், பயிற்சி அலுவலர் உள்ளிட்ட 17 பதவியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.
பதவியின் தன்மைக்கேற்ப 30 வயதுக்கு மேற்பட்ட 50 வயதிற்குள் உள்ள ஆண், பெண் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம். அரசுவிதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க தகுதியானோர் https://upsc.gov.in அல்லது http://www.upsconline.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment