ஆதாரை புதுப்பிக்க கடைசி தேதி எப்போது? எவ்வாறு புதுப்பிக்க வேண்டும்?
அனைத்து அரசு திட்டங்களுக்கும், பிற சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அப்டேட் செய்வது கட்டாயமாகும்.
அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்களின் அனைத்து விவரங்களும் ஆதாருடன் தற்போது இணைக்கப்படுவதால், ஆதார் அட்டை கட்டாயம் தேவை.
ஆதாரை அவ்வபோது அப்டேட் செய்ய வேண்டும் என கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆதாரை இலவசமாக புதுப்பிக்க மார்ச் 14 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இது தற்போது ஜூன் 14 2024வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான மக்கள் ஆதார் அட்டை வைத்திருப்பதை கருத்தில் கொண்டு, இலவச ஆன்லைன் ஆவணங்களைப் பதிவேற்றும் வசதி ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று UIDAI சமூக ஊடகத் தளமான X-இல் பதிவிட்டுள்ளது.
ஆதாரை எவ்வாறு புதுப்பிப்பது?
கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் அட்டை வைத்திருப்பதால் பலரும் தங்கள் அட்டையை புதுப்பிக்கவில்லை. இதனால் ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் இலவசமாகவே அப்டேட் செய்ய UIDAI சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது myAadhaar portal (myAadhaar) மூலமே நீங்கள் ஆன்லைனில் ஆதாரை புதுப்பித்து கொள்ள முடியும். , கைரேகை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு பயனர்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆதாரை மேம்படுத்துவது ஏன் முக்கியம்?
அனைத்து அரசு திட்டங்களுக்கும், பிற சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு முதல் புதிய சிம் கார்டு வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியம். நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமானது. ஆதார் அப்டேட் செய்யப்பட்டால் எளிதில் உங்களால் அனைத்தும் பெற முடியும்.
No comments:
Post a Comment