அசத்தலான வாட்ஸ்அப் மெட்டாAI சாட்பாட் அறிமுகம்! பயன்படுத்துவது எப்படி? சிறப்பு அம்சங்கள் என்னென்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, May 28, 2024

அசத்தலான வாட்ஸ்அப் மெட்டாAI சாட்பாட் அறிமுகம்! பயன்படுத்துவது எப்படி? சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

 அசத்தலான வாட்ஸ்அப்  மெட்டாAI சாட்பாட் அறிமுகம்!பயன்படுத்துவது எப்படி? சிறப்பு அம்சங்கள் என்னென்ன?



வாட்ஸ்அப்-பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மெட்டா AI சாட்பாட்டை பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


அப்ளிகேஷனிற்குள் மெட்டா சாட் செய்வதற்கான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது தனது யூசர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.


கேள்விகளை கேட்பதற்கும், பயனுள்ள யோசனைகளை பெறுவதற்கும் ஒரு அற்புதமான வழியாக இது அமைகிறது.


வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறந்து சாட் விண்டோவை தேர்வு செய்யவும்.


“New Chat” மெனுவிலிருந்து “Meta AI” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.


பிறகு விதிகள் மற்றும் சேவை நிபந்தனைகளை படித்து அதற்கு ஒப்புதல் வழங்கவும்.


வாட்ஸ் அப்பில் மெட்டா AI உடன் சாட் செய்வது எப்படி?


மெட்டா AI உடன் நீங்கள் பேசுவதற்கு துவங்க அதற்கு நீங்கள் மெசேஜ்களை அனுப்ப ஆரம்பிக்கலாம். வாட்ஸ்அப்பில் பிறருக்கு நீங்கள் எப்படி மெசேஜ் அனுப்புவிர்களோ அதே போல அனுப்பினால் போதுமானது. பல்வேறு வகையான தலைப்புகள் மற்றும் கேள்விகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் பதிலளிப்பதற்கு ஏற்ப மெட்டா மெட்டா AI வடிவமைக்கப்பட்டுள்ளது.


மெட்டா AI விரிவான அறிவு தளத்தை கொண்டுள்ளதால் பல்வேறு வகையான கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கிறது.


உங்களுடைய தேர்வுகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் மெட்டா AI பரிந்துரைகளை வழங்குவதற்கு வல்லது. திரைப்படங்கள் பார்க்க, புத்தகங்கள் படிக்க அல்லது அருகில் உள்ள ஹோட்டல்கள் பற்றி தெரிந்துகொள்ள போன்ற பரிந்துரைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.


பல்வேறு தலைப்புகளில் அர்த்தமுள்ள விவாதங்களை மேற்கொள்வதற்கு மெட்டா AI சிறந்தது. உங்களுக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் நீங்கள் மெட்டா AI உடன் விவாதிக்கலாம் தற்போதைய நாட்டு நடப்பு, பொழுதுபோக்கு மற்றும் பல போன்றவை இதில் அடங்கும்.


வெறுமனே நீங்கள் நினைப்பதை மெசேஜாக சாட் பாக்ஸில் டைப் செய்து சென்ட் பட்டனை அழுத்தினால் அது மெட்டா AI க்கு சென்றுவிடும். உங்களுடைய உள்ளீட்டின் அடிப்படையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தி மெட்டா AI அதற்கு பதில் அளிக்கும்.


 வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறந்து கீழ் வலது மூலையில் காணப்படும் மெட்டா AI ஐகானை காணுங்கள்.


அடுத்து மெட்டா AI சாட்பாட்டை பயன்படுத்துவதற்கு குறியீட்டை கிளிக் செய்யவும்.


இப்பொழுது AI மூலம் இயங்கும் சாட்பாட்டுடன் நீங்கள் கேள்விகளை கேட்கலாம், போட்டோக்களை உருவாக்க சொல்லலாம், உங்களுடைய பொழுதுபோக்குகள் பற்றி விவாதிக்கலாம்.


ஒரு குரூப் சாட்டில் மெட்டா AI பயன்படுத்துவது எப்படி?


நீங்கள் விருப்பப்படும் வாட்ஸ்அப் குரூப் சாட்டை திறக்கவும்.


மெசேஜ் பகுதியில் “@” என்பதை என்டர் செய்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து “Meta AI” என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்து நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை டைப் செய்து சென்ட் பட்டனை அழுத்தவும்.


இதற்கு மெட்டா AI தகுந்த முறையில் பதில் அளிக்கும். குரூப்பில் உள்ள அனைத்து நபர்களாலும் அதனை காண முடியும்.


“@Meta AI” என்று சேர்க்கப்பட்டுள்ள மெசேஜ்களை மட்டுமே AI ஆல் படிக்கவும், ரிப்ளை செய்யவும் முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குரூப் சாட்டில் உள்ள பிற மெசேஜ்களை அதனால் படிக்கவோ பதில் அளிக்கவோ முடியாது.

No comments:

Post a Comment