ஜூன் மாதத்தில் தமிழகத்தில் 8 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: எந்தெந்த நாட்களில் விடுமுறை? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 31, 2024

ஜூன் மாதத்தில் தமிழகத்தில் 8 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: எந்தெந்த நாட்களில் விடுமுறை?

 ஜூன் மாதத்தில்  தமிழகத்தில் 8 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: எந்தெந்த  நாட்களில்  விடுமுறை?


எதிர்வரும் ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இயங்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்துக்கும் இது பொருந்தும். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பட்டியலில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.


மாநில அளவிலான விடுமுறை, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் இதில் அடங்கும். அந்த வகையில் தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் மொத்தமாக 8 நாட்கள் விடுமுறையில் இருக்கும்.


தமிழகத்தில் 8 நாட்கள் விடுமுறை:


 ஜூன் மாதத்தின் ஐந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகள்), இரண்டாவது (ஜூன் 8) மற்றும் நான்காவது (ஜூன் 22) சனிக்கிழமை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17-ம் தேதி என 8 நாட்கள் தமிழகத்தில் வங்கி விடுமுறை நாட்கள். வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தேதிகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று வருவதை திட்டமிடலாம்.


வங்கி விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் முடியும். அதே போல நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற சேவைகளையும் பயன்படுத்த முடியும்.

No comments:

Post a Comment