முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க எளிய 8 பியூட்டி டிப்ஸ்...!
பெண்கள் முகத் தின் அழகை பாதுகாத்து வசீகரமாய் திகழ்வது மிகமிக முக்கியம். தன்னை நாகரீகமாகவும், கவர்ச்சியாகவும் அலங்கரித்துக் கொண்டாலும் முகத்தை அழகாக இருக்கச் செய்தால் அதன் அழகே தனிதான். அதற்கு சில எளிய முறைகளை கடைப்பிடித்தால் முக அழகுடன் வலம் வரலாம்.
*இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
*பாலேட்டை முகத்தில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு, முகம் கழுவினால் முகம் மென்மையுடன் பிரகாசமாக இருக்கும்.
*பாலுடன் சில துளிகள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவுடன் விளங்கும்.
*வாழைப்பழத்தை கூழாக்கி அதனுடன் தேனைக் கலந்து பூசி ஊறவைத்து கழுவிவர முகம் பளபளப்பாகும்.
*தக்காளிப் பழத்தை இரண்டாக நறுக்கி, முகத்தில் தேய்த்து, ஊறவைத்து, முகம் கழுவினால் முகம் பளபளப்பாக காட்சி தரும்.
*வெள்ளரிச் சாறை முகத்தில் தடவி, ஊறவைத்து பின்பு முகம் கழுவினால் பளீரென்று பிரகாசிக்கும்.
*பாலுடன் எலுமிச்சை சாறைக் கலந்து, அத்துடன் சிறிதளவு சர்க்கரையையும் கலந்து முகத்தில் பூசி, அரைமணி நேரம் கழித்து வெந்நீரினால் முகம் கழுவினால் முகம்
பிரகாசிக்கும்.
*பாதாம் பருப்பை ஊறவைத்து, தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து, கழுவினால் முகம் நல்ல நிறமாக மாறிவிடும்.
No comments:
Post a Comment