மிகவும் சுவையான காளான் 65 செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 4, 2024

மிகவும் சுவையான காளான் 65 செய்வது எப்படி?

 மிகவும் சுவையான காளான் 65 செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:


 காளான் - 6-7


சோள மாவு - 1/4 கப் 


பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)


 இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)


மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 


உப்பு - சுவைக்கேற்ப 


 சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்


 சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்


 மைதா - 2 டேபிள் ஸ்பூன்


 வெஜிடேபிள் ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு 


 கொத்தமல்லி - சிறிது


 எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் 


செய்முறை: 


 முதலில் காளானை நன்கு கழுவி, அதை 2-3 துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி, பூண்டு, மிளகுத் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, சாட் மசாலா, சிறிது கேசரி பவுடர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து கட்டிகளின்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.



பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 


 பின்பு அதில் காளான் துண்டுகளை போட்டு பிரட்ட வேண்டும். 


 அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளான் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான காளான் 65 தயார்.

No comments:

Post a Comment