ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில், 360 கூடுதல் காலி பணியிடங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி மொத்தமாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தற்போது கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் 2023, 2024 ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25.10.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை 25.11.2023 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 110 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரிய தேர்வு வாரிய இணையதளம் (website: http:// http://www.trb.tn.gov.in) வாயிலாக வெளியிடப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment