அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? தங்கத்ததைத் தவிர வேறு என்னவெல்லாம் வாங்கலாம்? - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, May 9, 2024

அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? தங்கத்ததைத் தவிர வேறு என்னவெல்லாம் வாங்கலாம்?

 அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? தங்கத்ததைத் தவிர வேறு என்னவெல்லாம் வாங்கலாம்?


அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அந்த பொருள் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். இருக்கப்பட்டவர்கள் தங்கம் வாங்குவர். இல்லாதவர்கள், தங்களால் இயன்ற பொருளை வாங்கலாம்.


பலர் நிலம், வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்குவது வழக்கம். அது போல் சிலர் கல் உப்பை கூட வாங்கி வைப்பர். இதுவும் லட்சுமி கடாட்சம்தான்.


சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் பொருள் வளரும் என்பது ஐதீகம். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கும் என்பார்கள். ஆனால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் எல்லோராலும் தங்கம் வாங்க முடியாது.


இதற்காக உப்பு, அரிசி, ஆடைகள், சிறிய பாத்திரம் உள்ளிட்டவைகளில் எது வேண்டுமானாலும் வாங்கலாம். அது போல் பெண் பார்க்க செல்வது, நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களை இந்த நாளில் செய்வது நல்லது. அட்சய திருதியை அன்று தானம் கொடுப்பதும் நல்லது.


ஆடை எனப்படும் வஸ்திர தானமாக இருக்கலாம். அன்னதானம் கொடுப்பதும் சிறப்புதான்.


இத்தனை சிறப்புகளை கொண்ட அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி, அதாவது  அதிகாலை 4.17 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது.


 அட்சய திருதியை நாளில் சுப முகூர்த்தம் காலை 5.33 முதல் 7.14 வரை இருக்கும்.


அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும் மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் சுபமுகூர்த்தம் உள்ளன. அதேபோல், மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை சிறிய முகூர்த்தங்கள் உள்ளன. இந்த நேரங்களில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.

No comments:

Post a Comment