பூக்காத செடியிலும் கொத்து கொத்தாக ரோஜா பூக்க 10 டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, May 13, 2024

பூக்காத செடியிலும் கொத்து கொத்தாக ரோஜா பூக்க 10 டிப்ஸ்..!

 பூக்காத செடியிலும் கொத்து கொத்தாக ரோஜா பூக்க 10 டிப்ஸ்..!


டிப்ஸ்:


1. செம்மண் தான் ரோஜா செடிக்கு என்னிக்குமே பெஸ்ட். ஆகவே அதில் செடியை வளருங்கள்!


2. உரம் ரோஜாவுக்கு மிகவும் முக்கியம். அதேநேரம் உரம் போடும் முன் வேரை சுற்றி மண்ணை கிளறிக்கொடுக்க வேண்டும்.


3. ரோஜா செடியில் பழுத்த இலைகள், பூச்சி வந்த இலைகள் இருந்தால் அவற்றை நிச்சயம் அகற்றிவிட வேண்டும்.


4. டை அமோனியம் பாஸ்பேட் 20 - இதை செடியின் வேர்களை சுற்றியும் போடலாம். அல்லது, செம்மண்ணில் கோக்கோபிட் மாட்டுச்சாணம், தொழு உரத்துடன் கலந்து போடலாம்.


5. மண்புழு உரத்துடன் முட்டை ஓடு மற்றும் டீ தூளை கலந்து பொடி செய்து செடிக்கு பயிரிடலாம்.


6. மாட்டு எருவினை காயவைத்து பொடி செய்து அத்துடன் வெங்காய தோலை சேர்த்து செடிக்க்கு உரமாக உபயோகப்படுத்தலாம்.


7. நன்கு மக்கிய ஆட்டு சாணத்தை மண்புழு உரம் கலந்து 3 வாரத்திற்கு ஒருமுறை செடியில் போடலாம்.


8. ரோஜா செடியில் இலைகளில் சுருள் இருந்தால், அவை செடி நோய்வாய்ப்பட்டதை குறிக்கும். அது போக மக்னீஷியம் சல்பேட் தண்ணீரில் கலந்து இலைகளில் மட்டும் தெளிக்கவேண்டும். இது, 1 மாதத்திற்கு ஒரு முறை இலைகளில் தெளிக்கவேண்டும். (அளவு: 1 லிட்டர் தண்ணிரில் 1 ஸ்பூன் கலக்கவேண்டும் அல்லது ஒரு லிட்டர் தண்ணிரீல் 2 மூடி (20 ML) வேப்ப எண்ணெய் கலந்து துளிர் இலைகளில் தெளிக்க வேண்டும்).


9. செடியின் வேர்களை சுற்றி டீ தூள் போடலாம். அதேபோல முட்டை தோல், வெங்காயத்தோல், காய்ந்த பழத்தோல் ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, அதை 2 ஸ்பூன் அளவு எடுத்து அதை தண்ணீரில் கலந்து செடிக்கு ஊற்றிவரலாம்.



10. பூவை செடியிலிருந்து பறிக்கும் பொழுது கத்திரிகோலைக்கொண்டு இலையுடன் சேர்த்து அதை கட் செய்ய வேண்டும். அப்பொழுது தான், அவ்விடத்தில் அடுத்த கிளை துளிர்விடும்!

No comments:

Post a Comment