வீட்டில் விளக்கேற்றுவதன் பயன்கள்,செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து சாஸ்திரங்கள் கூறுவதென்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, April 13, 2024

வீட்டில் விளக்கேற்றுவதன் பயன்கள்,செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து சாஸ்திரங்கள் கூறுவதென்ன?

 வீட்டில் விளக்கேற்றுவதன் பயன்கள்,செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து சாஸ்திரங்கள் கூறுவதென்ன?


வீட்டில் தினந்தோறும் தீபம் ஏற்றுவது  நம்முடைய கடமையாக இல்லாமல் இறைவனுக்காக செய்யப்படும் வழிபாடாக இருக்கவேண்டும்.


 ஆனால், நேரமின்மை, வேலை காரணமாக பலர் இதை கடமையாக  செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து, தீபமேற்றுவதன் அவசியம், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து சாஸ்திரங்கள் கூறுவது பற்றி பார்க்கலாம்.


அவசியம்


வீட்டில் தீபம் ஏற்றும்போது, மங்களகரமான நிலை உருவாகி, நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.


 அத்துடன் இருள் விலகி ஒளி பரவி தீய சக்திகளை விரட்டியடிக்கும்.


மேலும், வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் திருஷ்டி, தோஷம் போன்ற எத்தகைய பாதிப்புகளையும் அண்ட விடாது.


எனவே, நாள்தோறும் தவறாமல் தீபம் ஏற்றுவது அவசியமாகும்.


அவ்வாறு தீபத்தை ஏற்றும்போது ‘ஓம் ஒளிர் வளர் விளக்கே போற்றி’ என்ற மந்திரத்தை கூறிக்கொண்டே தீபத்தை ஏற்ற வேண்டும்.


இந்த மந்திரம் தீப தேவதைக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதாகும்.


அதேபோல், தீபத்தை குளிர வைக்கும் போது ‘ஓம் சாந்த சொரூபினியே நமஹ’ என்ற மந்திரத்தை கூறி குளிர்விக்க வேண்டும்.


தீபத்தை குளிர்விக்க ஏதேனும் ஒரு பூவால் குளிர வைப்பது நல்ல பலனைத் தரும்.


எத்தனை வகைகள்?


காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, பாவை விளக்கு, தூக்கு விளக்கு, கை விளக்கு மற்றும் குபேர விளக்கு போன்றவைகள் வீடுகளிலும், சர விளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு போன்றவைகள் கோயில்களிலும் ஏற்றப்படுகின்றன.


விளக்குகள் பெரும்பாலும் மண், வெண்கலம், வெள்ளி, பித்தளை, பஞ்சலோகம், எவர்சில்வர் போன்ற உலோகங்களால் தயார் செய்யப்படுகின்றன.


இவற்றில் எந்த விளக்காக இருந்தாலும், அதில் காமாட்சி அம்மன் அல்லது அஷ்டலக்ஷ்மிகளின் உருவம் இருப்பது நல்லது.


எந்த திசையில்?


தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீபமுகம் இருக்கலாம்.


தீபத்தை தரையில் வைக்கக் கூடாது.


தீபத்தை ஏற்றிய பின்பு, தீபத்திற்கு நேர் எதிராக நின்று இறைவனை வழிபட கூடாது.


தீபமானது கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருந்தால், வடக்கு திசையை பார்த்தவாறு நின்று இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும்.


விளக்கேற்றுவதன் பயன்கள்


விளக்கில் எத்தனை முகங்களுக்கு தீபமேற்றுகிறோமோ, அதனைப் பொறுத்து பலனைப் பெறலாம்.


ஒருமுக தீபமேற்றினால், மன சஞ்சலம் நீங்கும்,

பெரும்புகழ் உண்டாகும்.


இருமுக தீபத்தினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும்.


மூன்றுமுக தீபம் ஏற்றுவது, முன்வினை தோஷத்தை நீக்கி, புத்திரர்களால் மேன்மையை உண்டாக்கும்.


நான்குமுக தீபமேற்றிட, வீடு, வாகன வசதிகள் அமையும், விவசாயிகளுக்கு கால்நடை விருத்தியடையும்.


ஐந்துமுக தீபம் ஏற்றுவதால் அனைத்து செல்வ வளங்களையும் கொடுக்கும்.


செய்யக்கூடாதவை


பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி குளித்ததும் அவசர அவசரமாக ஈரஉடம்புடன், ஈரத்துணியுடன் தீபம் ஏற்றக்கூடாது.


ஆண்கள் ஈரத் துண்டை கட்டிக்கொண்டு தீபம் ஏற்றுவது தவறு.


பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக ஐந்து நாட்கள் தீபம் ஏற்றக்கூடாது.


முடிந்தால் 7 நாட்கள் வரை தீபம் ஏற்றாமல் இருப்பது நல்ல பலனை கொடுக்கும்.


காமாட்சி அம்மன் விளக்கில் முகம் தேய்ந்து இருந்தாலும், முகம் சரியாக தெரியவில்லை என்றாலும், அந்த விளக்கில் தீபம் ஏற்றக்கூடாது.


வீட்டில் சண்டை சச்சரவு இருக்கின்றபோது விளக்கு ஏற்றாமல் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment