ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர், எப்படி அருந்த வேண்டும்?மண்பானைத் தண்ணீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ...! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, April 9, 2024

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர், எப்படி அருந்த வேண்டும்?மண்பானைத் தண்ணீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ...!

 மண்பானைத் தண்ணீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ...!


``தண்ணீரைப் பொறுத்தவரை கோடைக்காலம், பனிக்காலம் எனப் பருவநிலை எதுவாக இருந்தாலும், எப்போதுமே உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் பருகுவது அவசியம். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து, அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவு மாறுபடும். உதாரணமாக, அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபவர்களுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும் என்பதால், அதை ஈடுகட்டும் அளவுக்கு அவர்கள் தண்ணீர் பருக வேண்டும். சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பிரச்னைகள் உள்ளவர்கள், தங்களுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் அளவே தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, ஒருவர் ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 3 - 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.


ஒருவர், தன் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துகிறாரா என்பதை, வெளியேறும் சிறுநீரின் அளவு மற்றும் நிறத்தை வைத்து அறிந்துகொள்ளலாம். எரிச்சலுடன் வெளியேறுவது, நீர்க்கடுப்பு என்று எந்தத் தொந்தரவும் இல்லாமல் சிறுநீர் இயல்பாக வெளியேற வேண்டும். சிறுநீர் நிறமற்று, அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேற வேண்டும். இவையெல்லாம், நீங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் பருகுவதற்கான அறிகுறிகள். சிறுநீர் கழிப்பதில் அசௌகர்யம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது போன்றவை... நீங்கள் உடலுக்குத் தேவையான தண்ணீரை அருந்தவில்லை என்பதற்கான அறிகுறிகள்.


கோடையில் வெந்நீர் தவிர்த்து, குளிர்ந்த நீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள நீர் பருவகுவதே நல்லது. சைனஸ் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள், இளம் சூட்டில் நீர் பருகலாம். கோடை ஆரம்பித்தவுடனே, பலரும் ஃபிரிட்ஜில் தண்ணீர் வைத்துப் பருக ஆரம்பிப்பார்கள். ஆனால், வெளியில் சென்று வந்து, அந்த வியர்வை ஈரத்துடன் ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து ‘சில்’ என்று குடித்தால்... சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் ஃபிரிட்ஜ் வாட்டரைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ஃபிரிட்ஜில் வைத்த தண்ணீரை எடுத்து வெளியே வைத்து, அதன் அதீத ஐஸ்தன்மை வடிந்ததும், மிதமான குளிர்ச்சியில் குடிக்கலாம்.


கோடை என்றாலே, பல வீடுகளிலும் மண்பானையில் தண்ணீர் ஊற்றிப் பருக ஆரம்பித்துவிடுவார்கள். ``மண்பானைத் தண்ணீரில் குளிர்ச்சி தாண்டி, ஆரோக்கியமும் இருக்கிறது.


``சித்த மருத்துவத்தில் மண்பானை `பிருதிவி பூத அம்சம்’ கொண்டது. உடல் மற்றும் உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பிருதிவி பூதம் மிகவும் அவசியம். அதனால், மண்பாண்டப் பொருள்களைப் பயன்படுத்துவது உடலுக்கு நன்மை தரக்கூடியது. குறிப்பாக, களிமண்ணில் ஏராளமான கனிமச் சத்துகள் நிறைந்துள்ளன. கார்பன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், நைட்ரஜன், பொட்டாசியம் ஆக்சிஜன், மெக்னீசியம், கால்சியம், சல்பர், இரும்புச்சத்து, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு, போரான், க்ளோரின், மாலிப்டினம், நிக்கல் போன்றவை களிமண்ணில் காணப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன‌.


பொதுவாக, மனித உடலின் பி.எச் (pH - potential of hydrogen) அளவு 7.35 - 7.45. நம் உடலில் ரத்தத்தின் pH அளவு 7.4. மண்பானை நீரின் pH அளவு 7 - 8. மனித உடலின் pH அளவும், களிமண்ணின் pH அளவும் ஓரளவு ஒத்திருப்பதால்தான், மண்பாண்டங்களில் வைத்திருக்கும் தண்ணீர் மற்றும் உணவை நாம் உட்கொள்ளும்போது, அது நன்மை தருவதாக அமைகிறது. எனவே, கோடை என்றில்லாமல் எல்லாக் காலங்களிலுமே மண்பானையில் தண்ணீர் ஊற்றிவைத்து அருந்தலாம். இயன்றவர்கள், சமையலுக்கு மண்பாணடங்கள் பயன்படுத்தலாம்.


இவ்வளவு சத்துகள் நிறைந்துள்ள மண்பானைகளில் தண்ணீர் வைத்துப் பயன்படுத்தும்போதும், சமைக்கும்போதும், உள்ளே வெப்பம் ஒரே சீராக ஊடுருவும். இதன் காரணமாகத்தான், மண்பாண்டங்களில் சமைத்த உணவுகள் சுவை, மனம் மாறாமல், நீண்டநேரம் கெடாமல் இருக்கும். மண்பாண்டங்களில் வைக்கப்படும் உணவுப்பொருள்களால், உடல் குளிர்ச்சி அடையும். உடலின் வளர்சிதை மாற்றம் ஒழுங்குப்படுத்தப்படும். உடலில் ஏற்படும் அமிலத்தன்மை மாறுபாடு சரிசெய்யப்படும். நல்ல செரிமானத்தைக் கொடுத்து, பசியைத் தூண்டும். வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்கும். அதனால் கோடை என்றில்லாமல் எப்போதுமே மண்பானை, மண்பாண்டம் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment