தினமும் நீச்சல் பயிற்சி செய்வதால் ஏற்படும் ஏராளமான நன்மைகள்...!
நீச்சல் பழகுவதை பலரும் போட்டிக்குரிய பயிற்சியாகத்தான் பார்க்கிறார்கள். கோடை காலங்களில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நீச்சல் குளத்தை நாடும் வழக்கத்தையும் பலர் பின்பற்றுகிறார்கள். உடற்பயிற்சியை போலவே இதனையும் பின் தொடரலாம். தினமும் நீச்சல் பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகளையும் பெறலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும் பயனுள்ள பயிற்சியாக நீச்சல் அமையும். சுவாச செயல்பாட்டையும் துரிதப்படுத்துவதன் மூலம் இதய துடிப்பையும் மேம்படுத்த உதவும். இதய தசைகளையும் பலப்படுத்தும்.
ஓடுவது, பளு தூக்குவது போன்ற பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது மூட்டுகளில் குறைவான அழுத்தத்தையே ஏற்படுத்தும். காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும். மூட்டுவலி, கீழ்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு நீச்சல் சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
தசை வலிமையை மேம்படுத்தும். கைகள், கால்கள், முதுகு மற்றும் தோள்பட்டைகளை பலப்படுத்தவும் வித்திடும். நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.
நீச்சல் என்பது கலோரிகளை எரிக்கும் பயனுள்ள பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு உதவும். கலோரிகளை எரித்து தசைகளை வலுப்படுத்தவும் செய்யும். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தால் உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் வழிவகுக்கும்.
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும். நீச்சலின்போது பின்பற்றும் சுவாச முறைகள் சுவாச தசைகளை வலுப்படுத்தவும், ஆக்சிஜன் நுகர்வை மேம்படுத்தவும் உதவும். ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு பிரச்சினை கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சி பயனுள்ளதாக அமையும்.
நீச்சல் பயிற்சி எண்டோர்பின்களை வெளியிடும். இது மகிழ்ச்சி ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
No comments:
Post a Comment