இட்லி மாவில் சோடா உப்பு சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, April 28, 2024

இட்லி மாவில் சோடா உப்பு சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள்

 இட்லி மாவில் சோடா உப்பு  சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள்


தற்போது உள்ள பெரும்பான்மையான உணவு மற்றும் உணவு பண்டங்களில் சோடா உப்பு சேர்க்கப்படுகிறது. அதிலும் இட்லி மாவில் சோடா உப்பு என்பது அதிகம் சேர்க்கப்படுகிறது. வீடுகளில் செய்யப்படும் இட்லி பஞ்சு போன்று மென்மையாக வருவதற்கு இந்த சோடா உப்பு பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் தீங்கானது. அதனால் ஏற்படும் தீமைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.


தீமைகள்


சமையலில் சேர்க்கப்படும் சோடா உப்பு காரத்தன்மை வாய்ந்ததாகும். இதனால், நமது இரத்தத்தில் இருக்கும் காரத்தன்மையானது மாறுகிறது.


இரத்தத்தில் காரத்தன்மை அதிகரிப்பதால் உடலில் பல பிரச்சினைகள் உண்டாகும்.


சிலருக்கு வயிறு சம்பந்தமான பல பிரச்சினைகள் உண்டாகும். உதாரணமாக, வயிறு எரிச்சல், வயிறு வலி, வாயு தொல்லைகள் போன்றவை.


பொதுவாக சோடா உப்பில் சோடியம் பைகார்பனேட் அதிகம் உள்ளதால், உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.


சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மேலும், கல்லீரலில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றும் தன்மை கொண்டது.


இவற்றில் பாஸ்போரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும், இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.


சரும பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.

No comments:

Post a Comment