நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக்கொள்ள உதவும் உணவுகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, April 27, 2024

நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக்கொள்ள உதவும் உணவுகள்..!

 நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக்கொள்ள உதவும் உணவுகள்..!


கோடைக்காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை சீக்கிரம் ஏற்படும். அப்போது தலைவலி, ஒற்றை தலைவலி, மயக்கம், முகப்பரு, உதட்டில் வெடிப்பு ஏற்படும். இவற்றை தவிர்க்க, நீர்ச்சத்து குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.


காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதில் இளநீர், பழைய சோறு நீராகாரம் குடிக்கலாம். அரை டீஸ்பூன் வெந்தயம் அல்லது பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து காலையில் பருகலாம். காலை உணவாக கம்பங்கூழ் அல்லது கேப்பங்கூழ் குடிக்கலாம்.


வெயில் உச்சத்தில் இருக்கும் காலை 11.00 - மாலை 3.00 மணி வரை டீ, காபியை தவிர்த்து, குளுமை தரும் மோர் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் தினமும் பழத் துண்டாகவோ, ஜுஸாகவோ அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


வழக்கமாக குடிக்கும் நீரில் துளசி விதைகளை ஊற வைத்து குடிப்பது, வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடுவது உடலை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும். வாரம் இரு முறை தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, அதிகபட்சம் -30 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.


வெயில் காலத்தில் செரிமான பிரச்னை நிறைய பேருக்கு வரும். அவர்கள் கூடுமான வரை காரம் நிறைந்த அதிகம் மசாலா கலந்த உணவை தவிர்க்கவும். உணவில் வெள்ளை பூசணி, சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment