எந்தெந்த காய்கறிகள் என்ன அழகினை மேம்படுத்தும் ? எளிய பியூட்டி டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, April 30, 2024

எந்தெந்த காய்கறிகள் என்ன அழகினை மேம்படுத்தும் ? எளிய பியூட்டி டிப்ஸ்..!

 எந்தெந்த காய்கறிகள் என்ன அழகினை மேம்படுத்தும் ? எளிய பியூட்டி டிப்ஸ்..!


சமையல் அறையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்று நாம் குறிப்பிடுவோம். அதே சமையல் செய்யும் கூடத்தில் உள்ள பொருட்கள் ெகாண்டு நம்மை அழகாகவும் மாற்றிக்கொள்ளலாம். எந்தெந்த காய்கறிகள் என்ன அழகினை மேம்படுத்தும் என்று தெரிந்து கொள்ளலாம்.


*தக்காளி நறுக்கும் போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்திப் பூசுங்கள். வேலை முடியும் வரை (ஒரு மணி நேரம்) அந்த பேக் அப்படியே முகத்தில் வைக்கவும். அதன் பின் முகத்தை கழுவ வேண்டும்.


*வெள்ளரி இருந்தால், அதில் இருந்து ஒரு துண்டை எடுத்து கண்களுக்கு கீழே தேய்த்து தடவினால் கண்களை குளிர்ச்சியாக்கும். முகத்தில் உள்ள கருப்பு கோடுகளை நீக்கும்.


*எலுமிச்சை ஜூஸ் செய்யும் போது பிழிந்த எலுமிச்சை மூடியுடன், மோர்/தயிரை சேர்த்து முகத்தில் தேய்த்துக் கழுவ வேண்டும். முகம் பளபளக்கும்.


*பழங்களில் பப்பாளி ஒரு துண்டு, ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் என்று தினமும் எதையாவது ஒரு பழத்துண்டு வைத்து முகத்திற்கு ஃபேஷியல் பேக் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் கழித்து உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் போது வித்தியாசத்தை தெரிந்து கொள்வீர்கள்.


*நன்றாக பழுத்த ஒன்று அல்லது இரண்டு வெள்ளரிப் பழங்களை சுத்தமாக அலம்பி சிறு துண்டங்களாக்கி மிக்சியில் சிறிது நீர் ஊற்றி அரைக்க வேண்டும். ஜூஸை வடிகட்டி விட்டு ஐஸ் சேர்த்தோ, சேர்க்காமலோ தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம். வெள்ளரிச் சாறு குடித்து வந்தால் மேனியின் நிறம் கூடும். பளபளப்பு கொடுக்கும்.


*முட்டைக்கோசின் நான்கைந்து இலைகளை அரைத்து, சாறை எடுத்து, அதில் சிறிதளவு ஈஸ்டும் தேனும் சேர்த்து இக்கலவையை முகத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து நல்ல தூய்மையான துணியை எடுத்து தண்ணீரில் நனைத்துப் பிழிந்து துடைத்தால் வறண்ட தோலின் தன்மை மாறி மிருதுவாகும்.


*தேன், கேரட் சாறு, வெள்ளரிச் சாறு, மசித்த வாழைப்பழம், பனீர் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சுருக்கம், தொய்வு நீங்கி சருமம் புத்துணர்ச்சி பெறும்.


*காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து பஞ்சை நனைத்து முகத்தை சுத்தம் செய்ய அழுக்கு நீங்கி பளிச்சென்று இருக்கும்.


*கோதுமை மாவு, பயத்தம் மாவு, அரிசி மாவு மூன்றையும் தலா ஒரு ஸ்பூன் வீதம் எடுத்து காய்ச்சாத பாலில் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment