புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...!
புடலங்காய் வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்தது. நீர் சத்து நிறைந்த நல்ல மருத்துவ குணம் நிறைந்தது.
எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது. நார்சத்து நிறைந்த புடல், உடலுக்கு தேவையான எல்லா நல்ல சத்துகளையும் உள்ளடக்கியது. காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாஷனை கொடுத்தால் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும். புடலங்காய் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகிறது.
வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றும் தன்மைக் கொண்டது. மாரடைப்பைத் தடுக்க வல்லது.
புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோûஸட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.
விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு பொரியல், கூட்டு சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் குறையும்.
புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது.
இதய நோயாளிகள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர். புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.
அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது.
இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
No comments:
Post a Comment