பிளம்ஸ் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்...! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, April 11, 2024

பிளம்ஸ் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்...!

 பிளம்ஸ் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்...!


பிளம்ஸ் பழம் பச்சை, சிவப்பு, ஊதா, மஞ்சள் நிறத்தில் பந்து வடிவில் காணப்படும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டு கலவைகள் நிறைந்துள்ளன. பிளம்ஸ் பழம் சுமார் 40 வகைகளை உள்ளடக்கியது. அதில், சாண்டா ரோசா, பிளாக் ஆம்பர், ரெட் பியூட்டி, ஆப்பிரிக்க ரோஸ் மற்றும் பிளாக் பியூட்டி ஆகியவை சில முக்கிய வகைகள் ஆகும்.


பிளம்ஸ் பழத்தில் பிளவினாய்ட்ஸ் எனும் வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது. அதனால் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, சில நோய்களை வராமல் தடுக்கும். அவற்றை பார்ப்போம். பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.


உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வகையான உணவுகளை உண்ணும் போது அதனோடு பிளம்ஸ் சேர்த்து சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் சேராமல் எடையை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுகிறது.பிளம்ஸ் பழங்களில் உள்ள சத்துக்கள் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ளதால் முடி கொட்டுவதை தடுக்கிறது. மேலும் இளம்வயதில் நரை முடி பிரச்னையை போக்குகிறது.தோலில் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவை குணமாக தினமும் ஒரு பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டுவந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் அடிக்கடி பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்னை நீங்கி சிறுநீரக வேலைகளை சீராக்கி நச்சுகள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக

வெளியேற்றுகிறது.


கர்ப்பிணிப் பெண்கள் பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் இப்பழத்தில் உள்ள போலிக் அமிலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டுவருவது நல்லது. நார்ச்சத்து தான் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் செரிமானம் செய்ய உதவுகிறது. பிளம்ஸ் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புப் பிரச்னை, மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் செயலாற்றுகிறது.


இப்பழத்தில் மெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயலாற்றலுக்கு உறுதுணையாக இருக்கிறது. நாம் சாப்பிடும் பல வகையான பழங்களில் ஒவ்வொரு சத்துக்கள் கொண்டிருக்கும். ஆனால் பிளம்ஸ் தனித்துவமான நமக்கு நன்மை தரக்கூடிய அனைத்தையும் பெற்றிருக்கும் பழமாகும்.

No comments:

Post a Comment