மிகவும் பயனுள்ள 22 சமையல் டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, April 14, 2024

மிகவும் பயனுள்ள 22 சமையல் டிப்ஸ்..!

 மிகவும் பயனுள்ள 22 சமையல் டிப்ஸ்..!


*மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடியாக்கும்போது, சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால், நன்கு தூளாகிவிடும்.


*தோசை வார்க்கத் துவங்கும் போது, முதலில் கொஞ்சம் பெருங்காயத்தூளை கல்லின் மேல் பரவலாகத் தூவி துடைத்துவிட்டு பிறகு மாவை ஊற்றினால், வட்டமான மொறுமொறு தோசைகள் கல்லில் ஒட்டாமல் சுலபமாக எடுக்க வரும்.


*பாகற்காயில் உள்ள கசப்பு போக சிறிது உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடம் வைத்தவிட்டு, பிறகு கழுவி விட்டு சமைத்தால் கசப்புத் தன்மை குறைவாக இருக்கும்.


*கோதுமை உள்ள பாத்திரத்தில் வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.


*மீன் பொரிக்கும்போது மெழுகுவர்த்தியை அடுப்பின் அருகில் ஏற்றி வைத்தால் மீன் பொரிக்கும் வாடை நம் வீட்டை தாண்டாது.


*கரிப்பிடித்த பாத்திரத்தின் மீது சிறிதளவு தூள் உப்பு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் தூவி அதன் மீது டிஸ்ஸு பேப்பர் அல்லது நியூஸ் பேப்பரை போடவும், பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து 10 நிமிடம் கழித்து பேப்பரை எடுத்து பார்த்தால் பாத்திரத்தில் உள்ள கரி அகன்று பளிச்சென்று மாறிவிடும்.


*அடை மாவுடன் கார்ன் பிளேக்ஸ் கலந்து செய்தால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.


*சமையலில் உப்பு அதிகமாகி விட்டால் தக்காளியை போடுங்கள். சரியாகிவிடும்.


*அப்பளம், வற்றல், வடகம் இவற்றுடன் காய்ந்த சிவப்பு மிளகாய் சிலவற்றை போட்டால் பூச்சிகள் அண்டாது.


*மழைக்காலங்களில் உப்பு ஜாடியில் நாலைந்து அரிசியை போட்டு வைத்தால் தண்ணீர் வடியாமல் இருக்கும்.



* மோர் குழம்புக்கு அரைக்கும் போது ஒரு ஸ்பூன் கடுகையும் போட்டு அரைத்தால் வாசனையாக இருக்கும்.


* எலுமிச்சை சாதம் பிசையும் போது வறுத்த வெந்தயப் பொடியைப் போட்டு கலந்தால் சாதம் மணமுடன் இருக்கும்.


* பக்கோடா மாவை கலக்கும் போது சிறிது நெய்யும், உப்புப் போட்ட தயிரையும் கலந்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.


* ஆம்லெட் போடும்போது கொஞ்சம் பால் கலந்து அடிச்சிப் போடுங்க. அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.



* இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது நான்கு புதினா இலைகளைப் போட்டு அரைத்தால் சட்னி வாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.


* நல்லெண்ணெய் பாட்டிலில் கொஞ்சம் வெல்லத்தை போட்டு வைத்தால் சிக்கு வாசனை வராது.


* பொங்கல் செய்யும் போது சிறிது டால்டாவைப் போட்டால் பொங்கல் பானையில் ஒட்டாது.


* வெண் பொங்கலுக்கு வெந்த பின் சீரகம், நல்ல மிளகு பொடித்துப் போட்டால் சுவைக்கும்.


* மோர்க்குழம்பு செய்யும் போது சிறிது வேர்க்கடலை அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.


* வெண்டைக்காய் சமையல் செய்யும் போது எலுமிச்சை சாறு சேர்த்து சமைத்தால் ஒட்டாமல் ருசியாக அமையும்.


* ப்ரக்கோலி அடர் பச்சை நிறத்தில் அழுத்திக் கட்டி வைத்த பூச்செண்டு போல இருக்க வேண்டும். சிறிது விரிந்து உதிர்ந்து காணப்பட்டாலும் வாங்க வேண்டாம்.


* பொரித்த உணவுகளை டப்பாக்களில் வைக்கும்போது சீரகத்துடன் சிறிது உப்பை வைத்து பொடித்து சிறு துணியில் மூட்டையாக கட்டி வைத்தால் காரல் வாடை வராமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

No comments:

Post a Comment