ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், ரத்த அழுத்தப் பிரச்சனை சரி செய்யவும் உதவும் சுவரொட்டி..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, March 16, 2024

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், ரத்த அழுத்தப் பிரச்சனை சரி செய்யவும் உதவும் சுவரொட்டி..!

 ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், ரத்த அழுத்தப் பிரச்சனை சரி செய்யவும் உதவும் சுவரொட்டி..!


ஆட்டுக்கறியை விட அதன் மற்ற உறுப்புகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன, குறிப்பாக ரத்த அளவை அதிகரிக்க பலரும் பரிந்துரைப்பது சுவரொட்டி எனும் மண்ணீரலைத் தான். ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள நபர்கள் வாரம் ஒருமுறை இதை தவறாமல் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 


கர்ப்பிணி பெண்கள், ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடுவது பலனைத் தரும். வயிற்றுப்புண், வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கும் அற்புதமான உணவு சுவரொட்டி தான்.


சுவரொட்டி வறுவல் எப்படி செய்வது?


தேவையான பொருட்கள்:


மிளகு- ஒரு ஸ்பூன்


சீரகம்- ஒரு ஸ்பூன்


சோம்பு- ஒரு ஸ்பூன்


சுவரொட்டி- 2


சின்ன வெங்காயம்- 10


இஞ்சி, பூண்டு விழுது- தேவையான அளவு


கரம் மசாலா தூள்- அரை டீஸ்பூன்


பெருஞ்சீரகம்- அரை டீஸ்பூன்


தேங்காய்- சிறிதளவு


நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்


செய்முறை:


மட்டன் கடையில் சுவரொட்டியை வெட்டாமல் வாங்கி வர வேண்டும், அதனை நன்றாக சுத்தம் செய்த பிறகு குக்கரில் போட்டு 2 விசில் வரை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சி ஜாரில் பொடித்துக்கொள்ள வேண்டும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்ததும், பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, லவங்கப்பட்டை கருவேப்பில்லை சேர்க்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.


அதன்பிறகு சுவரொட்டியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம், இதனுடன் கரம் மசாலா தூள், நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு பொடியை சேர்க்க வேண்டும்.


பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும், கடைசியாக நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வறுவல் தயார்

No comments:

Post a Comment