அசத்தலான ருசி தரும் குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, March 9, 2024

அசத்தலான ருசி தரும் குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?

 அசத்தலான ருசி தரும் குழம்பு மிளகாய் தூள்  அரைப்பது எப்படி?


ஒரு கிலோ குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?


ஒரு கிலோ அளவு, வர மிளகாய்க்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் எல்லாம் சரியாக இருக்கும். இந்த அளவுகளில் குழம்பு மிளகாய்த்தூள் அரைத்தால் நீங்கள் வைக்கும் குழம்பு மணக்க மணக்க ருசிக்க ருசிக்க இருக்கும்.


தேவையான பொருட்கள்


வர மிளகாய் – 1 கிலோ


வர மல்லி – 1 கிலோ


கடலைப்பருப்பு – 100


கிராம், துவரம்பருப்பு – 100 கிராம்


அரிசி – 100 கிராம்


சீரகம் – 200 கிராம்


சோம்பு 100 கிராம்


கடுகு – 100 கிராம்


மிளகு – 200 கிராம்


வெந்தயம் – 25 கிராம்


விரலி மஞ்சள் – 25 கிராம்


கருவேப்பிலை 3 கைப்பிடி அளவு


வரமிளகாயை வாங்கும் போது நல்ல சிவப்பாக இருக்கக்கூடிய வரமிளகாயாக வாங்கிக் கொள்ளுங்கள்.


 குண்டு மிளகாய் அல்லது நீட்டு மிளகாய் உங்கள் விருப்பம் போல பயன்படுத்தலாம். 


வர மல்லி பார்ப்பதற்கு புதுசாக இருக்க வேண்டும். கலர் மங்கி போய் இருக்கக் கூடாது.


 அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


செய்முறை


வரமிளகாயையும் தனியாவையும் நன்றாக வெயிலில் போட்டு காய வைத்துக் கொள்ளவும். 


வர மிளகாய் கையில் எடுத்து உடைத்தால் வத்தல் போல உடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


 மற்றபடி மற்ற பொருட்களை எல்லாமே கடாயில் போட்டு வறுக்க வேண்டும். 


அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை வைத்து நன்றாக சூடு செய்து, அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.


அடுப்பை சிம்மில் வைத்து விட்டுத்தான் எல்லா பொருட்களையும் தனித்தனியாக அந்த கடாயில் போட்டு எண்ணெய் எதுவும் ஊற்றாமல் டிரை ஆக வறுக்க வேண்டும்.


 எல்லா பொருட்களும் லேசாக நிறம் மாறி வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.


 ஒவ்வொரு பொருட்களாக தனித்தனியாக கடாயில் போட்டு வறுத்து ஒரு அகலமான தாம்பல தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.எதுவும் கருகிப் போகக்கூடாது. ஜாக்கிரதையாக வறுக்க வேண்டும்.


 கருவேப்பிலையில் ஒரு பச்சை கருவேப்பிலை கூட இருக்கக் கூடாது. மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளுங்கள்.


இல்லை என்றால் கருவாப்பிலைகளை தினம் தினம் சேகரித்து நிழலிலேயே உலர வைத்து, ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். அந்த காய்ந்த கருவேப்பிலைகளை வறுக்காமலேயே இதில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல அரிசி வறுப்படும்போது. கவனமாக இருக்க வேண்டும். அரிசி, எல்லா அரிசியையும் வெள்ளை நிறத்தில் பொரிந்து வறுபட்டு இருக்க வேண்டும். கடுகு படபடவென பொரியும் வரை வருக்க வேண்டும். சீரகம் லேசான வாசனை வரும் வரை வருக்க வேண்டும். மிளகு கார வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பருப்பு வகைகள் லேசாக நிறம் மாறி வரும் வரை வறுக்கவும்.


வறுத்த இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு தான் ரைஸ்மிலில் கொடுத்து அரைக்க வேண்டும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது காய்ந்த வரமிளகாய், வரமல்லி, வறுத்த இந்த பொருட்கள் எல்லாம் சேர்ந்து மூன்று கிலோ நமக்கு இருக்கும். எல்லா பொருட்களையும் ஒன்றாக கொட்டி ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து வாருங்கள்.


அரைத்த பின்பும் மிளகாய்த்தூள் 3 கிலோ அளவு நமக்கு கிடைக்கும். இந்த மிளகாய் தூளை அரைத்த உடன் ஒரு பேப்பரில் கொட்டி நன்றாக ஆரவைத்து ஒரு சில்வர் டப்பாவில் போட்டு காற்றுப் போகாமல் மூடி வைத்தால் ஒரு வருடத்திற்கு நிச்சயம் கெட்டுப்போகாது. தேவைக்கு ஏற்ப சின்ன டப்பாவில் கொஞ்சம் எடுத்து பயன்படுத்தி வர வேண்டும்.


உங்களுக்கு வண்டு வரும் என்ற சந்தேகம் இருந்தால், தேவையான அளவு மிளகாய் தூளை மட்டும் வெளியே வைத்துக் கொண்டு மீதி மிளகாய் தூளை நன்றாக கவரில் ரேப் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து விடுங்கள். எத்தனை வருடமானாலும் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment