உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள்...!
உயர் ரத்த அழுத்தம் இதய நோய் தொடங்கி உடலில் பல்வேறு விளைவுகளை ஏறபடுத்தக் கூடியது. அதை உணவின்மூலம் எப்படி கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.
உயர் ரத்த அழுத்தம் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதயத் துடிப்பில் சீரற்ற தன்மையை உண்டாக்கும். இந்த ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் நம்முடைய உணவுமுறைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அப்படி உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
சிட்ரஸ் பழங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.
மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி செய்கிறது.
பூசணி விதையில் பொட்டாசியம் அதிகம். இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முக்கியமான மினரல் ஆகும்.
புரத மூலங்களான பீன்ஸ் வகைகள் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் வேலையைச் செய்கிறது.
பெர்ரி வகைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நோய் ஆபத்தைத் தடுக்கும்.
பிஸ்தா பருப்பில் உள்ள கொழுப்பு அமிலங்களும் பொட்டாசியமும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கின்றன.
அடர் பச்சை நிற கீரைகளில் உள்ள இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
செலரியில் உள்ள நீர்ச்சத்தும் மினரல்களும் கனிமச் சத்தும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கச் செய்யும்.
No comments:
Post a Comment