தலைமுடி அதிகமாகவும் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவும் கொய்யா இலை ஹேர்பேக் - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, March 21, 2024

தலைமுடி அதிகமாகவும் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவும் கொய்யா இலை ஹேர்பேக்

 தலைமுடி அதிகமாகவும் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர   உதவும்  கொய்யா இலை ஹேர்பேக்


தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை இருக்கலாம். பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை, தலையில் அதிக கெமிக்கல் பயன்பாடு என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம்.


 பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம்.


 அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. 


வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம். கொய்யா இலை ஹேர் பேக்கை அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.


தேவையான பொருட்கள்:


கொய்யா இலை – 1 கைப்பிடி


முட்டை – 1


கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்


செய்முறை:


இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ள வேண்டும்.


 மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.


இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வாஷ் செய்து கொள்ள வேண்டும். 


இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளரும்.

No comments:

Post a Comment