திருநீற்றை தண்ணீரில் குழைத்து பூசுவது சரியா? கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?
"நீறில்லா நெற்றி பாழ்" என்றால் ஒளவை. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியே வருகையில், நெற்றியில் திருநீறும், நடுவே குங்குமும் பூசி வருபவர்களை பார்க்கும் போதே, ஒரு மங்கலம், தெய்வீகம் என அனைத்தும் நிரம்பி இருப்பதை நம்மால் காண முடிகிறது.
சிலர் அப்படியே அள்ளி பூசுவார்கள். சிலர் தண்ணீரில் குழைத்து பூசுவார்கள்.
அவ்வாறு தண்ணீரில் குழைத்து பூசுவதற்கும் சில விதிமுறைகள் உள்ளது தெரியுமா?
கடைபிடிக்க வேண்டியவை...
திருநீறு என்றால் சாம்பல் என்பது அனைவரும் அறிந்ததே.
திருஞானசம்பந்தர் தமது முதல் பாடலிலேயே "காடுடைய சுடலைப் பொடி பூசி" என்று பாடியுள்ளார். அவ்வகையில், ஆண்களோ, பெண்களோ வெறும் திருநீற்றை எப்போது வேண்டுமானாலும் பூசிக் கொள்ளலாம்.
ஆனால், நீரில் குழைத்துப் பூசுவதானால், ஒரு சில விதிமுறைகள் உண்டு.
திருநீறு என்பது சிவ வடிவமாகவும்,அவற்றைப் பூசிக்கொள்ள மேனியெல்லம் இறையம்சம் நிறைந்து இருப்பதாகவும் கருதப்படுகிறது.
அதுபோல, இறைவனின் திருமுடியில் வீற்றிருக்கும் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
கங்கையோடு சிவத்தை இணைத்து, சிவகங்காவாக பூசுவதால், அதற்கு எல்லா சமயமும் உகந்ததல்ல.
தீட்டு இல்லாதவர் மட்டுமே திருநீற்றை நீரோடு குழைத்து பூசிக்கொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது.
தீட்டு என்பது ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொருந்தும் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.
ஆண்கள் கூட பிறப்பு அல்லது இறப்புத் தீட்டு உள்ள நாட்களில் திருநீற்றை நீரில் குழைத்து பூசிக்கொள்ளக் கூடாது.
பருவம் எய்திய வயது முதல் மாதவிலக்கு நிற்கும் வயது வரை, பெண்கள் திருநீற்றை நீரில் குழைத்து பூசிக்கொள்ளக் கூடாது.
பூப்படையாத பெண் குழந்தைகளும், மாதவிலக்கு நின்ற பெண்களும் திருநீற்றை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு
வெறும் திருநீற்றை எவரும் எப்போதும் பூசுவதில் தவறில்லை.
ஆனால், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும், திருமணம் ஆன சுமங்கலிப் பெண்களும் நெற்றியில் திருநீற்றின் நடுவே குங்குமத்தை வைத்துக் கொள்வது அவசியம்.
No comments:
Post a Comment