இயற்கையான முறையில் முகத்தை அழகாக்க சில டிப்ஸ்..!
அதிக பணம் கொடுத்து எதற்காக செயற்கை அழகை பெற வேண்டும்?இயற்கையான முறையில் வீட்டில் கிடைக்கும் சில எளிய பொருட்களை வைத்து எப்படி முகத்தை அழகாக்குவது என்று பார்க்கலாம்.
எளிய வழிமுறைகள்
* வீட்டில் தேநீருக்காக காய்ச்சிய பாலிலிருந்து வரும் ஆடையை (பால் ஆடை) தனியே எடுத்து ஆர வைத்து, முகத்தில் போட்டு வர முகத்தின் கருமை நிறம் நீங்கி முகம் அழகாகும்.
* கற்றாழை சாறுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பின் முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.
* தக்காளியை இரண்டாக வெட்டி ஒரு பாகத்தில் சர்க்கரையை சேர்த்து முகத்தில் மெதுவாக தேய்த்து வர முகத்தின் கருமை நிறம் நீங்கும்.
* பச்சைப் பயறு (பாசிப்பயறு) மாவை குளிக்கும் முன் உடம்பில் பூசி குளித்தால் வியர்வையால் வரும் துர்நாற்றங்கள் நீங்குவதோடு, சருமம் மிருதுவாகும்.
* எண்ணெய் பிசுக்கில்லாத மிருதுவான சருமம் பெற கடலைமாவு, பச்சைபயறு (பாசிப்பயறு) சேர்த்து பூச வேண்டும்.
* இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் இருப்பதன் மூலம், கண்களில் கருவளையம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
* அடர் கருமை உள்ள இடங்களில் பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்து வர கருமை நிறம் நீங்கும்.
* காரட், பீட்ரூட், பப்பாளி பழ சாறு குடித்து வர முகத்தின் அழகு கூடும்.
* முடிந்தளவு, பழங்களை அரைத்து முகத்தில் பூசுவதற்கு பதிலாக, உண்டு வந்தால் அழகு, ஆரோக்கியம் இரண்டுமே மேம்படும்.
விளக்கெண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கண் அடிபாகத்தில் பூசி 2 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் கண் கருவளையம் நீங்கும்.
No comments:
Post a Comment