தினந்தோறும் சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாமா? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, March 16, 2024

தினந்தோறும் சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாமா?

 தினந்தோறும் சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாமா?


கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலிலிருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது. இப்படி எடுக்கப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெயை சருமத்தில் மாய்ஸ்ச்சரைசராகவும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் ட்ரைகிளிசரைடு வகை கொழுப்பானது எளிதில் உடலால் உட்கிரகிக்கப்படும்.


அது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமோ என பயப்பட வேண்டாம். வீட்டிலேயே தேங்காயை ஆட்டி நீங்களே தயாரிக்கும் இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்துச் சமைப்பதோ, பொரிக்கப் பயன்படுத்துவதோ கூடாது.


வயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும், அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களும் தினமும் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப் படுவார்கள்.


அதே போல ஆயில் புல்லிங் செய்யவும் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கப் பரிந்துரைப்போம். அது வாய் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க இது உதவும்.


சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், கூந்தலை வறண்டு போகாமல் வைத்திருக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். தினசரி சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பொரியல் போன்றவை செய்யப் பயன்படுத்தலாம். அதில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதுதான்.

No comments:

Post a Comment