பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, March 1, 2024

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்?

 பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்?


பழங்களில் பல வகைகள் உண்டு. பழத்தின் தன்மைகேற்ப அதை வெறும் வயிற்றில், உணவுக்கு முன்பு, உணவுக்கு பின்பு, உணவுடன், படுக்கைக்கு செல்லும் போது என்று சரியாக எடுக்க வேண்டும். பழங்களின் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க சரியான முறையில் எடுத்துவர வேண்டும்.


பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?


பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை கொண்டிருந்தால் அன்றைய முதல் உணவான இதில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். அதனால் பழங்களை எடுத்துகொள்வதற்கு முன்பு சில கொழுப்புகள் அல்லது புரதங்களை எடுத்துகொள்ள வேண்டும். இது இரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் இருக்க உதவும். மேலும் நாள் முழூவதும் நீடித்த ஆற்றல் அளவையும் உறுதி செய்கிறது. முழுமையான உணவுக்கு பிறகு உடனடியாக பழங்கள் எடுப்பது தவறானது. ஏனெனில் கலோரி தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் இது பிரக்டோஸ் கொழுப்பு தேக்கத்தை உண்டு செய்யலாம்.


பழங்களை எப்போது சாப்பிடலாம்?


பழங்களை மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு எடுப்பது உடலின் இயற்கையோடு பொருந்துகிறது ,. இது சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது. உடல் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இந்த நேரத்தில் சரியான பழங்கள் எடுப்பது உடல் ஒட்டுமொத்த நன்மைகளை பெறுவதற்கு சரியானதாக இருக்கும்.


அதே போன்று உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரம் அழித்து பழத்துண்டுகளை சாப்பிடலாம். உணவுக்கு மாற்றாக பழங்களை எடுப்பதாக இருந்தால் காலை நேரத்தில் பழங்கள் எடுத்துகொள்ளலாம். உணவு செரிமானத்துக்கு இடையூறு இல்லாமல் பழங்களை மென்று சாப்பிட்டால் நார்ச்சத்து மலச்சிக்கலை இல்லாமல் செய்யும்.


காலை, மாலை, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்


காலை நேரத்தில் பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் சேர்ப்பது ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்துடன் நாளை தொடங்க உதவும். காலை நேரத்தில் உற்சாகம் அதிகரிக்க ஆப்பிள்களும் நல்ல தேர்வாக இருக்கும்.


மதிய உணவுக்கு பிறகு அல்லது உறங்கும் முன் செரிமானத்தை நன்மை செய்ய்யும் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள்கள் சேர்க்கலாம்.


இரவு நேரங்கள் எனில் தூக்கத்தை தூண்டும் பண்புகள் கொண்ட பழங்கள் எடுத்துகொள்ளலாம். மெலடோனின் பெயர் பெற்ற செர்ரிகள், கிவி மற்றும் சீதாப்பழம் போன்றவை நல்ல தூக்கத்தை அளிக்கும்.


உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிட விரும்பினால் பழங்கள் சாப்பிடுவது சிறந்த பழக்கமாக இருக்கும். உடல் உணவை விரைவாக செரிக்கும். பழங்களை செரிக்க வெவ்வேறு நொதிகள் செயல்படும். அப்போது நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவும். பசியை உணர மாட்டீர்கள்.


பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்?


இயற்கையான இனிப்புகள் கொண்ட பழத்தை இயற்கை மாறாமல் அப்படியே எடுத்துகொள்ள வேண்டும். தோலுடன் எடுக்க வேண்டிய பழங்களை அப்படியே ஓடும் நீரில் அலசி, வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து என தகுந்தாற்போல் சுத்தம் செய்து நறுக்கி எடுத்துகொள்ள வேண்டும். பழங்களை நறுக்கிய உடன் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருந்து , ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிட கூடாது.


பழங்களை பழத்துண்டுகளாக எடுப்பதுதான் சிறந்தது. பழச்சாறாக சர்க்கரை சேர்த்து எடுப்பது, பால் கலந்து எடுப்பது இயற்கைக்கு மாறானது. பழங்களை அப்படியே எடுத்தாலே உடனடி ஆற்றல் கிடைக்கும். அதிக தாகம் உண்டு செய்யும் கோடைகாலங்களில் மட்டும் பழச்சாறாக எடுத்துகொள்ளலாம். பழங்களை அப்படியே ருசித்து மென்றால் தன் நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் முழுமையாக கிடைக்கும்.


பழங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்யும். சருமத்தின் பொலிவை கூட்டும் ஆனால் இந்த பலன்களை முழுமையாக பெற பழங்களை சரியான முறையில் சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.


பழங்களில் நன்மை தரக்கூடியவை என்னென்ன?


எல்லா பழங்களுமே ஊட்டம் அளிக்க கூடியவை. சத்துக்கள் நிறைந்தவை. சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் என ஒவ்வொருவருமே பழத்தை சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் சில துண்டுகள் கொய்யா, ஆப்பிள், மாதுளை, நாவல் பழம், விளாம்பழம், பப்பாளி, நெல்லிக்கனி, இலந்தை பழம் என்று திட்டுமிட்டு மாற்றி மாற்றி எடுத்துகொள்வது பலன் அளிக்கும். விலை உயர்ந்த ட்ராகன் பழமும், கிவி பழமும், அவகேடோவும் அளிக்கும் சத்துக்களை விலை குறைந்த கொய்யா பன்மடங்கு தந்துவிடுகிறது என்பதை மறுக்க முடியாது, பழங்களை சரியான முறையில் சரியான அளவில் எடுத்துவருவது நிச்சயம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவே செய்யும்.

No comments:

Post a Comment